பக்கம் எண் :

774யுத்த காண்டம் 

நிற்கிறது.  யாரையும்  நோக்காது குனிந்து செல்லும் இராவணன்
அங்கும் பூமகள் என்ற பெண்ணைப் பார்க்க நேர்ந்தது என்பது
ஓர் நயம்.
 

(3)
 

7275.

நாள் ஒத்த நளினம் அன்ன முகத்தியர் நயனம்

எல்லாம்

வாள் ஒத்த; மைந்தர் வார்த்தை இராகவன் வாளி

ஒத்த;--

கோள் ஒத்த சிறை வைத்து ஆண்ட கொற்றவற்கு,

அற்றைநாள், தன்

தோள் ஒத்த துணை மென் கொங்கை நோக்கு

அங்குத் தொடர்கிலாமை.

 

கோள்  ஒத்த  சிறை வைத்து ஆண்ட கொற்றவற்கு-
ஒன்பது கோள்களையும் ஒருங்கே சிறைவைத்து  அடிமைப்படுத்தி
ஆண்ட  வெற்றி  வீரனான  இராவணனுக்கு; அற்றை நாள் -
தோற்றுத் திரும்பிய அந்த நாளில்; நாள் ஒத்த நளினம் அன்ன
முகத்தியர்
- பகலில்  ஒருசேர  மலர்ந்த தாமரை மலர் போன்ற
முகத்தினையுடைய  மகளிரது;நயனம் எல்லாம் வாள் ஒத்த -
கண்கள்  எல்லாம்  வாட்படை  போல் துன்பத்தை மிகுவித்தன;
மைந்தர் வார்த்தை- மக்களுடைய சொற்கள்; இராகவன் வாளி
ஒத்த
- இரகுகுல  நாயகனின்  அம்பு  போல்  துன்பம்  தந்தன;
இதற்கு   காரணம்  என்னையோ  எனின். தோள் ஒத்த துணை
மென் கொங்கை
- தோள் வலிக்குச் சார்ந்த மார்பில் அமைந்த
இரட்டை   மென்  கொங்கைகளையுடைய வெற்றித் தெய்வமாகிய
கொற்றவையின்; நோக்கு அங்குத் தொடர்கிலாமை- வெற்றி
நோக்கு   அவனிடத்தில்   இதுவரை   தொடர்ந்து   இப்போது
தொடர்கிலாமையேயாகும்.
 

கொற்றவையின்  வெற்றி  நோக்கால் இதுவரை முக்கணான்
முதலினோரைப் புக்க போரெல்லாம் வென்று நின்ற இராவணன்
தாயினும்  தொழத்தக்காள்  மேல்  தங்கிய  காதல் நோயாலும்,
இராகவன்   முனிவாலும்  அவ்வெற்றி   நோக்கை  இழந்ததை
ஆசிரியர் இப்பாடலில் குறிப்பிடுகிறார்.
 

(4)
 

7276.

மந்திரச் சுற்றத்தாரும், வாணுதல் சுற்றத்தாரும்,

தந்திரச் சுற்றத்தாரும், தன் கிளைச் சுற்றத்தாரும்,

எந்திரப் பொறியின் நிற்ப, யாவரும் இன்றி, தான் ஓர்

சிந்துரக் களிறு கூடம் புக்கென, கோயில் சேர்ந்தான்.