மந்திரச் சுற்றத்தாரும்- அடுக்கு மீது அடாதது என உரைக்கும் மந்திரத் துணையானவர்களும்; வாணுதல் சுற்றத்தாரும்- ஒளிபொருந்திய நெற்றியையுடைய மனைவியரும்; தந்திரச் சுற்றத்தாரும் - சேனைத்தலைவர்களாகிய துணைவரும்; தன் கிளைச் சுற்றத்தாரும் - உறவு முறையானவர்களும்; எந்திரப் பொறியின் நிற்ப - இதுவரை இராவணனிடம் காணாத தன்மை கண்டதால் இயந்திரத்தின் வன்மையால் இயங்கும் பொறி அவ் இயந்திர வன்மை தீர்ந்தவுடன் செயல் படாது நிற்றல் போல் நிற்க; யாவரும் இன்றி - ஒருவரும் பின் தொடரும் வலிமையின்றி அசையாது நிற்றலால் தனியாக; தான் ஓர் - இராவணன் ஒரு; சிந்துரக் களிறு - செம்பொடியை உடல் முழுதும் அணிந்த ஆண்யானை; கூடம்புக்கென - கொட்டாரம் சென்று சேர்வது போல்; கோயில் சேர்ந்தான் - அரண்மனையின் உட்புறம் சேர்ந்தான். |
(5) |
இராவணன் தூதரை அழைத்து வரக் கஞ்சுகியை ஏவல் |
| 7277. | ஆண்டு ஒரு செம் பொன் பீடத்து, இருந்து, தன் |
| வருத்தம் ஆறி, |
| நீண்டு உயர் நினைப்பன் ஆகி, கஞ்சுகி அயல் |
| நின்றானை, |
| 'ஈண்டு, நம் தூதர்தம்மை இவ்வழித் தருதி' |
| என்றான். |
| பூண்டது ஓர் பணியன், வல்லை, நால்வரைக் |
| கொண்டு புக்கான். |
| |
ஆண்டு- அவ்வரண்மனையிடத்தில்; ஒரு செம்பொன் பீடத்து இருந்து- செம்பொன்னால் செய்யப்பட்ட ஒப்பற்ற பீடத்தில் அமர்ந்து;தன் வருத்தம் ஆறி - போரில் ஏற்பட்ட உடல் வருத்தமும் தோல்வியால் ஏற்பட்ட மனவருத்தமும் ஓரளவு தணிந்தவுடனே; நீண்டு உயிர் நினைப்பன் ஆகி - இனிமேல் செய்ய வேண்டியதைப் பற்றி மிகப்பெருஞ் சிந்தனையுடையவன் ஆகி; கஞ்சுகி அயல் நின்றானை - அருகில் நின்றவனாகிய மெய்ப்பை புக்கவனாகிய மெய்க்காப்பாளனைப் பார்த்து; ஈண்டு - இப்போதே; நம் தூதர் தம்மை- நம் தூதுவர்களை; இவ்வழித் தருதி என்றான்- இந்த இடத்திற்கு அழைத்து வா என்று கட்டளையிட்டான்; பூண்டதோர் பணியன் வல்லை - அப்பணி |