பக்கம் எண் :

776யுத்த காண்டம் 

தலை மேற்கொண்ட கஞ்சுகி மேற்கொண்ட பணியினை முடித்து
விரைவில்; நால்வரைக் கொண்டு புக்கான்- நான்கு தூதரை
அழைத்து வந்தான்.
 

இப்பாடலில் உள்ள "நீண்டு உயர் நினைப்பன் ஆகி" என்ற
தொடர்   கவனத்தைக்  கவருவது;  இங்குப்  பிறரிடம் கலந்து
பேசுதல் இராவணனைப் பொறுத்த அளவு தன் முடிவைப் பிறர்
ஏற்கச்  செய்தல்   என்பதற்கான  சடங்காகவே  அமைவதை
யுணர்த்தவே கவிஞர் மேற்கண்ட தொடரைக் கையாண்டுள்ளார்
போலும்.
 

(6)
 

தூதரிடம் எண்டிசைச் சேனைகளைக் கொணரப் பணித்தல்
 

7278.

மனகதி, வாயுவேகன், மருத்தன், மாமேகன் என்று

இவ்

வினை அறி தொழிலர் முன்னா, ஆயிரர்

விரவினாரை,

'நினைவதன் முன்னம், நீர் போய் நெடுந் திசை 

எட்டும் நீந்தி,

கனை கழல் அரக்கர் தானை கொணருதிர், கடிதின்'

என்றான். 

 

வினை  அறி  தொழிலர்- செய்யவேண்டிய செயலைச்
செய்யவேண்டியவாறு செய்யும் செயல் அறிந்தவராய, மனகதி,
வாயு வேகன், மருத்தன், மாமேகன் என்று இவ்
- என்ற
பெயருடைய இவர்கள்; முன்னை  ஆயிரர் விரவினாரை -
முதலாக  வந்து  சேர்ந்த  ஆயிரக்கணக்காக  வந்த  தூதரை 
(நோக்கிய  இராவணன்);  நினைவதன் முன்னம்- நினைப்பு
எழும்  காலஅளவுக்குள்; நீர்  போய் -  நீங்கள்  போய்;
நெடுந்திசை எட்டும் நீந்தி - பெரிய எட்டுத் திசைகளையும்
கடந்து; கனைகழல் அரக்கர் தானை- ஒலிக்கின்ற வீரக்கழல்
அணிந்த     அரக்கச்    சேனைகளையெல்லாம்;   கடிதின்
கொணருதிர்  என்றான்
- விரைவில்  அழைத்துக்கொண்டு
வாருங்கள் என்று கட்டளையிட்டான்.
 

(7)
 

7279.

'ஏழ் பெருங் கடலும், சூழ்ந்த ஏழ் பெருந் தீவும்,

எண் இல்

பாழி அம் பொருப்பும், கீழ்பால் அடுத்த

பாதாளத்துள்ளும்,