பக்கம் எண் :

 கும்பகருணன் வதைப் படலம் 777

ஆழி அம் கிரியின் மேலும், அரக்கர் ஆனவரை

எல்லாம்,

தாழ்வு இலிர் கொணர்திர்' என்றான்; அவர் அது

தலைமேல் கொண்டார். 

 

ஏழ்பெருங்கடலும்   சூழ்ந்த   ஏழ்  பெருந்தீவும் - ஏழு
பெருங்கடல்களால்   சூழப்பட்ட  ஏழு  பெரிய  தீவுகளிலும்; எண்
இல் பாழி அம் பொருப்பும் - எண்ணி அளவிடமுடியாத அழகிய
வலிய  மலைகளிலும்; கீழ் பால்  அடுத்த பாதாளத்துள்ளும் -
கீழே  உள்ள  பாதாள  உலகத்திலும்; ஆழியம் கிரியின் மேலும்
- சக்கரவாளம் என்ற மலையின் மீதும் உள்ள; அரக்கர்ஆனவரை
எல்லாம்
- எல்லா அரக்கர்களையும்; தாழ்வு இலிர் கொணர்திர்
என்றான்
- காலம்   தாழ்த்தாது  அழைத்து  வாருங்கள்  என்று
இராவணன்  கூறினான்;  அவர் அது தலைமேல் கொண்டார்-
அத்தூதுவர், தலைவன் கட்டளையைத் தலை மேல் கொண்டனர்.
 

(8)
 

அமளியில் இராவணன் வருந்தி இருத்தல்
 

7280.

மூவகை உலகுளோரும் முறையில் நின்று ஏவல்

செய்வார்,

பாவகம் இன்னது என்று தெரிகிலர், பதைத்து விம்ம,

தூ அகலாத வை வாய் எஃகு உறத் தொளைக்

கை யானை

சேவகம் அமைந்தது என்ன, செறி மலர் அமளி

சேர்ந்தான்.

 

முறையில்  நின்று ஏவல் செய்வார் - தங்களுக்கு உரிய
முறைப்படி   இட்ட   ஏவலைச்   செய்பவர்களாகிய;  மூவகை
உலகுளோரும்
- விண், மண், பாதலம் என்ற மூன்று உலகத்தில்
உள்ளவர்களும்;   பாவகம்  இன்னது  என்று தெரிகிலர் -
இராவணனுடைய  மனக்கருத்து  இதுவென அறியாதவர்களாகிப்;
பதைத்து   விம்ம  -  மனம்  வருந்தி  அழுது  விம்ம; தூ
அகலாதவைவாய்  எஃகு உறத்
- தசை நீங்காத கூரிய வேல்
உடலில் ஆழமாகப் பாய்தலால்; தொளைக்கையானை - உட்புழை
உடைய கையினையுடைய யானை; சேவகம் அமைந்தது என்ன
- யானைக்