பக்கம் எண் :

778யுத்த காண்டம் 

கூடத்திற்குச்   சென்று  சேர்ந்ததுபோல; செறிமலர் அமளி
சேர்ந்தான்
- மலர் நிறைந்த மலர்ப் படுக்கையில் சேர்ந்தான்.
 

பாவகம் - மனக்கருத்து. தூ - தசை. சேவகம் - யானைக்
கொட்டாரம்.
 

(9)
 

7281.

பண் நிறை பவளச் செவ் வாய், பைந் தொடி, சீதை

என்னும்

பெண் இறைகொண்ட நெஞ்சில் நாண்

நிறைகொண்ட பின்னர்,

கண் இறை கோடல் செய்யான், கையறு கவலை

சுற்ற,

உள் நிறை மானம்தன்னை உமிழ்ந்து, எரி

உயிர்ப்பதானான்.

 

பண்நிறை பவளச் செவ்வாய் - இனிய இசை போன்று
பேசும்  பவளம்  போன்ற  சிவந்த வாயினையும்; பைந்தொடி
சீதை
- பைம்பொன்னால் ஆன வளையல்களையும் அணிந்த
சீதை;   என்னும்   பெண்  இறை கொண்ட நெஞ்சில் -
என்கின்ற பெண் தங்கி இடம் முழுதும் கொண்ட நெஞ்சத்தில்;
நாண்   நிறை  கொண்ட பின்னர் - முதல் நாள் ஏற்பட்ட
தோல்வி  காரணமாகத்  தோன்றிய  நாணம் முழுதும் நிரம்பிய
பின்னர்;  கண்  இறை  கோடல் செய்யான் - சிறிதும் கண்
துயிலாதவனாய்;   கையறு  கவலை  சுற்ற  -  செயலறவும்
கவலையும் சூழ; உள்நிறை மானம் தன்னை - தன் நெஞ்சில்
சீதையிருந்த  இடத்தில்  நிரம்பிய மான உணர்வை; உமிழ்ந்து
எரி உயிர்ப்பதானான்
- வெளிப்படுத்த விரும்புபவன் போல்
நெருப்பென பெருமூச்சு விட்டான்.
 

கண் இறை கோடல்-கண் சிறிதும் துயிலாமை.
 

(10)
 

7282.

வான் நகும்; மண்ணும் எல்லாம் நகும்;--நெடு

வயிரத் தோளான்--

நான் நகு பகைஞர் எல்லாம் நகுவர் என்று, அதற்கு

நாணான்;

வேல் நகு நெடுங் கண், செவ் வாய், மெல் இயல்,

மிதிலை வந்த,

சானகி நகுவள்--என்றே நாணத்தால்

சாம்புகின்றான்.