வீரக்கழலணிந்த இலங்கை வேந்தனாம் இராவணனைத்; தாங்கிய அமளி மாட்டு- தாங்கிக் கொண்டுள்ள படுக்கையின் பக்கத்தில் இருந்த; ஓர் தவிசுடைப்பீடம் சேர்ந்தான்- மெத்தை இட்ட அமரும் ஆசனத்தில் அமர்ந்தான். |
இங்கு மாலியவான் இராவணன் அழைக்காமல் அவனைச் சந்திக்க வருகிறான். |
(12) |
| 7284. | இருந்தவன், இலங்கை வேந்தன் இயற்கையை எய்த |
| நோக்கி, |
| பொருந்த வந்துற்ற போரில் தோற்றனன் போலும் |
| என்னா, |
| 'வருந்தினை, மனமும்; தோளும் வாடினை;--நாளும் |
| வாடாப் |
| பெருந் தவம் உடைய ஐயா!-என், உற்ற பெற்றி?' |
| என்றான். |
| |
இருந்தவன் - தவிசுடைப் பீடத்தில் இருந்தவன் ஆகிய மாலியவான்; இலங்கை வேந்தன்- இராவணனுடைய; இயற்கையை எய்த நோக்கி - நிலைமையை உற்றுப் பார்த்து; பொருந்த வந்துற்ற போரில் தோற்றனன் போலும் என்னா- அண்மையில் நெருங்கி வந்த போரில் இவன் தோற்றுவிட்டான் போலும் என்று மனத்தில் எண்ணி; நாளும் வாடாப் பெருந்தவம் உடைய ஐயா - எந்நாளும் கெடாத பெருந்தவ ஆற்றல் பெற்ற ஐயனே!; மனமும் வருந்தினை - மனம் வருத்தமுற்றுள்ளாய்; தோளும் வாடினை - யார்க்கும் தோலாத தோள்களும் வாடியுள்ளன; என் உற்ற பெற்றி என்றான்- உற்ற செயல் யாது என வாய்விட்டு வினவினான். |
(13) |
இராவணன் நிகழ்ந்தவை கூறல் |
| 7285. | கவை உறு நெஞ்சன், காந்திக் கனல்கின்ற |
| கண்ணன், பத்துச் |
| சிவையின் வாய் என்னச் செந் தீ உயிர்ப்பு உறத் |
| திறந்த மூக்கன், |
| நவை அறு பாகை அன்றி அமுதினை நக்கினாலும் |
| சுவை அறப் புலர்ந்த நாவான், இனையன |
| சொல்லலுற்றான்; |