கவை உறு நெஞ்சன் - துன்பம் மிகப் பொருந்திய மனத்தையும்; காந்திக் கனல்கின்ற கண்ணன்- நெருப்புப் போல் எரிகின்ற கண்ணினையும்; பத்துச் சிவையின் வாய் என்ன - பத்துத் துருத்திகளின் வாய் போன்று; செந்தீ உயிர்ப்பு உறத் திறந்த மூக்கன் - செந்தீயுடன் பெருமூச்சுக் காற்று வெளிப்படும் விடைத்த பத்து மூக்குகளையும்; நவை அறு பாகை அன்றி- குற்றமில்லாத வெல்லப்பாகையன்றி; அமுதினை நக்கினாலும்- அமுதத்தையே நக்கி உண்டாலும்; சுவை அறப் புலர்ந்த நாவான் - சுவை முழுதும் உறைக்காதவாறு உலர்ந்த நாவினையும் உடையவனான இராவணன்; இனையன சொல்லலுற்றான்- (கீழ்வரும்) இத்தகைய சொற்களைக் கூறத் தொடங்கினான். |
கவை-கவ்வை. இடைக்குறை. சிவை - துருத்தி. இராவணனின் சினமும் சோகமும் கலந்து வெளிப்படுமாறு இப்பாடல் அமைந்துள்ளது. |
(14) |
| 7286. | 'சங்கம் வந்து உற்ற கொற்றத் தாபதர்தம்மோடு |
| எம்மோடு |
| அங்கம் வந்து உற்றது ஆக, அமரர் வந்து உற்றார் |
| அன்றே; |
| கங்கம் வந்து உற்ற செய்ய களத்து, நம் குலத்துக்கு |
| ஒவ்வாப் |
| பங்கம் வந்துற்றது அன்றி, பழியும் வந்துற்றது' |
| அன்றே? |
| |
சங்கம் வந்து உற்ற - தொகுதியாக வானரச் சேனையோடு வந்து சேர்ந்த; கொற்றத் தாபதர்- வெற்றியுடைய தவ வேடத்தையுடைய இராம இலக்குவர்; தம்மோடு எம்மோடு - தமக்கும் எமக்கும்; அங்கம் வந்து உற்றது ஆக- போர் வந்து மூண்டபோது; அமரர் வந்து உற்றார் அன்றே- அப்போரினைக் காணத் தேவர்கள் வந்தார்கள் அல்லவா; கங்கம் வந்து உற்ற செய்ய களத்து- கழுகுகள் பறந்து வந்து நெருங்கிய குருதியால் சிவந்த அப்போர்க்களத்தில்; நம் குலத்துக்கு ஒவ்வாப் பங்கம் வந்து உற்றது அன்றி - நம் அரக்கர் குலத்துக்குப் பொருந்தாத தோல்வி வந்து பொருந்தியது அல்லாமல்;பழியும் வந்து உற்றது - தீராத பழியும் வந்து பொருந்தி விட்டது என்று இராவணன் கூறினான். |