அமரர் வந்து உற்றார் அன்றே - என்ற தொடர் இருவர் போரில் தேவர் ஏன் வந்தனர் என்று நடந்ததை நுண்ணறிவுடன் எண்ணிப் பார்க்கும் இராவணனின் அறிவுத் திறத்தை வெளிப்படுத்துகிறது. எந்நிலையிலும் நுணுக்கமாக நடந்ததை எண்ணிப் பார்க்கும் மனத்திறம் உடையவன் இராவணன். சங்கம்-கூட்டம் கங்கம்-பருந்து அன்று, ஏ-அசைகள். |
(15) |
| 7287. | 'முளை அமை திங்கள் சூடும் முக்கணான் முதல்வர் |
| ஆக, |
| கிளை அமை புவனம் மூன்றும் வந்து உடன் |
| கிடைத்தவேனும், |
| வளை அமை வரி வில் வாளி மெய் உற |
| வழங்கும்ஆயின், |
| இளையவன்தனக்கும் ஆற்றாது, என் பெருஞ் |
| சேனை--நம்ப! |
| |
நம்ப- குல முதல்வ; முளை அமை திங்கள் சூடும் முக்கணான் - பிறைச் சந்திரனைத் தலையில் சூடிய மூன்று கண்களையுடைய சிவபெருமானை; முதல்வர் ஆக - முதலாகக் கொண்டு; கிளை அமை புவனம் மூன்றும்- மேலும் மேலும் வளருந்தன்மை கொண்ட மூன்று உலகத்திலுள்ள மக்களும்; வந்து உடன் கிடைத்த வேனும் - ஒரு சேர வந்து பக்கத் துணையாய் நின்றாலும்; என் பெருஞ்சேனை - என்னுடைய பெரிய படை; வளை அமை வரிவில் வாளி - வளைதல் பொருந்திய கட்டமைந்த வில்லிலிருந்து அம்புகளை; மெய் உற வழங்கும் ஆயின்- உடலில் உறப் பொருந்துமாறு வெளிப்படுத்தினால்; இளையவன் தனக்கும் ஆற்றாது- இளையவனாகிய இலக்குவனின் ஆற்றலுக்கு முன் நிற்க மாட்டாது. |
கிளை - மென்மேல் வளர்தல். கிடைத்தவேனும் - பக்கத் துணையாயினும். சங்கரன் கொடுத்த வரமும் வாளும் பெற்றவனாதலால் முக்கணானை ஈண்டு இராவணன் நினைவு கூர்கிறான். |
(16) |
| 7288. | 'எறித்த போர் அரக்கர் ஆவி எண் இலா வெள்ளம் |
| எஞ்சப் |
| பறித்த போது, என்னை அந்தப் பரிபவம் முதுகில் |
| பற்றப் |