| பொறித்த போது, அன்னான் அந்தக் கூனி கூன் |
| போக உண்டை |
| தெறித்த போது ஒத்தது அன்றி, சினம் உண்மை |
| தெரிந்தது இல்லை. |
| |
எறித்த போர் அரக்கர் ஆவி - தன் மேல் படைக் கலங்களை எறிந்த போரில் வல்ல அரக்கரது உயிரினை; எண் இலா வெள்ளம் எஞ்சப் பறித்த போது - எண்ணிக்கையில் அடங்காத வெள்ளத்தவரில் ஒருவரும் எஞ்சி நிற்காமல் கவர்ந்த போதும்; என்னை அந்தப் பரிபவம் முதுகில் பற்றப் பொறித்த போது- எனக்கு இப்படிப்பட்ட அவமானம் முதுகில் தங்கும்படி அம்புகளைப் பதித்த போது; அன்னான் - அந்த இராமனிடம்; அந்தக் கூனி கூன் போக உண்டை தெறித்த போது- சிறு வயதில் கூனியின் கூன் போக வேண்டும் என்ற நல்லெண்ணத்தோடு மண்ணுருண்டைகளை அடித்தபோது; ஒத்ததன்றி - இருந்த விளையாட்டு மனநிலையை ஒத்த மனநிலை அன்றி; சினம் உண்மை தெரிந்தது இல்லை - சினம் இருத்த நிலை தெரியவில்லை. |
இத்தோல்வித் துன்பத்தை என் முதுகில் தங்கும்படி இராமன் செய்தான் என்பது பொருள். |
(17) |
| 7289. | 'மலை உறப் பெரியர் ஆய வாள் எயிற்று அரக்கர் |
| தானை |
| நிலையுறச் செறிந்த வெள்ளம் நூற்று-இரண்டு |
| எனினும், நேரே |
| குலை உறக் குளித்த வாளி, குதிரையைக் களிற்றை |
| ஆளைத் |
| |
| தலை உறப் பட்டதுஅல்லால், உடல்களில் தங்கிற்று |
| உண்டோ? |
| |
மலை உறப் பெரியர் ஆய - மலையை மாறுபட்டுப் பெரிய உடலினை உடைய; வாள் எயிற்று அரக்கர் தானை - கூர்மையான பற்களை உடைய அரக்கரது சேனை; நிலை உறச் செறிந்த வெள்ளம் நூற்று இரண்டு எனினும்- இராமனை நிலையாக நெருங்கி நின்றவை நூற்று இரண்டு வெள்ளம் எனினும்; நேரே குலை உறக்குளித்த வாளி - அவனால் நேராகக் குறி தவறாமல் செலுத்தப்பட்ட அம்புகளின் தொகுதி; குதிரையைக் களிற்றை ஆளை - குதிரைப் படையினையும், யானைப்படையினையும், |