7645. | ‘நோயினை நுகரவேயும், நுணங்கி நின்று உணங்கும் ஆவி நாய் உயிர் ஆகும் அன்றே, நாள் பல கழித்த காலை? பாயிரம் உணர்ந்த நூலோர், "காமத்துப் பகுத்த பத்தி"- ஆயிரம் அல்ல போன-"ஐ-இரண்டு" என்பர் பொய்யே.*
|
இப்பாடல் சாக்காடு என்னும் அவத்தையைக் கூறுகிறது என்பர் வை.மு.கோ. பாயிரம் - நூலின் வரலாறு, காமத்துப் பகுத்த பத்தி. காமப் பகுதியில் பகுத்த அவத்தை வரிசை. ஐ - இரண்டு பத்து. அவையாவன காட்சி, வேட்கை, உள்ளுதல், மெலிதல், ஆக்கம் செப்பல், நாணுவரையிறத்தல், நோக்குவ எல்லாம் அவையே போறல், மறத்தல், மயக்கம், சாக்காடு என்பன,
|