| என் போல்பவர் சொல்லுவது, எண் உடையார் உன் போல்பவர் யார் உளர்?" என்று உரையா, |
தன் போல்பவர் தானும் இலாத - தன்னை ஒத்தவர் யாவர் தானும் இல்லாத; தனிப்பொன் போல் ஒளிர் மேனியனை - சிறப்புடைய பொன்போல் ஒளி விடுகிற திருமேனியை உடைய (திருமாலை); புகழோய் - (அந்த மதுகைடபர்கள்) பார்த்துப் புகழுடையவனே; என் போல்பவர் சொல்லுவது - எங்களைப் போன்றவர் சொல்லுவதற்கு உரித்தானது (யாதெனில்); எண் உடையார் உன் போல்பவர் யார் உளர் - எண்ணி மதிக்கத்தக்க வலிமை உடையார் உன்னைப் போன்றவர் யாவர் உளர்; என உரையா - என்று கூறி; இவ் "என உரையா" என்பது 71 ஆம் பாடலில் உள்ள "சொல்லுதலும்" என்றதனோடு இயையும். |
எண் - புகழ், ஒளிர் மேனியன் - ஒளிரும் திருமேனியை உடைய திருமால், உரையா - செய்யா எனும் வாய்பாட்டு உடன்பாட்டு வினை எச்சம். |
(69) |
| 7796. | ‘"ஒருவோம் உலகு ஏழையும் உண்டு உமிழ்வோம்; இருவோமொடு நீ தனி இத்தனை நாள் பொருவோமொடு நேர் பொருதாய்; புகழோய்! தருவோம் நின் மனத்தது தந்தனமால்; |
ஒருவோம் உலகு ஏழையும் உண்டு உமிழ்வோம் - (நாங்கள்) ஒருவராகவே ஏழு உலகத்தையும் உண்டு உமிழக் கூடிய வலிமை உடையவராவோம்; இருவோமொடு - (அப்படிப்பட்ட தனித்தனி வலிமை வாய்ந்த எங்கள்) இருவருடனும்; இத்தனை நாள் நீ தனி பொருவோமொடு நேர் பொருதாய் - இவ்வளவு காலமும் நீ தனியாகப் பொருகின்ற (எங்களோடு) நேர் நின்று போர் செய்தாய்; புகழோய் - புகழுக்கு உரியவனே; நின் மனத்தது தருவோம் தந்தனமால் - (நீ) உன் மனத்தினால் வேண்டும் வேண்டுதலைத் தருவோம்; தந்தோ விட்டோம். |
தருவோம் தந்தனம் - தாங்கள் விரைந்து தவறாது கொடுப்போம் என்பதை வற்புறுத்த வந்தது. காலவழுவமைதி. தருவோம் - எதிர்காலம் தந்தனம் - இறந்தகாலம். |
(70) |
| 7797. | ‘"ஒல்லும்படி நல்லது உனக்கு உதவச் சொல்லும்படி" என்று, அவர் சொல்லுதலும், |