பக்கம் எண் :

 அதிகாயன் வதைப் படலம் 101

"வெல்லம்படி நும்மை விளம்பும்" எனக்
கொல்லும்படியால் அரி கூறுதலும்.
 

நல்லது  உனக்கு ஒல்லும்படி உதவச் - நன்மை உனக்கு ஏற்படும்
படி உதவுவதற்காகச்; சொல்லும்  படி  என்று அவர் சொல்லுதலும் -
சொல்லுக   என்று   அவர்  சொல்லுதலும்; நும்மை  வெல்லும்  படி
விளம்பும்  என
 - உங்களை வெல்வதற்கான வழியைச் சொல்லுங்கள்
என்று; கொல்லும்படியால்   அரி    கூறதலும்   -   (அவர்களைக்)
கொல்லுவதற்காகத் திருமால் கூறிய உடனே.
 

                                                  (71)
 

7798.‘"இடையில் படுகிற்கிலம் யாம்; ஒரு நின்
தொடையில் படுகிற்றும்" எனத் துணியா,
"அடையச் செயகிற்றி; அது ஆணை" எனா,
நடையில் படு நீதியர் நல்குதலும்,
 

நடையில்     படு  நீதியர்  -  ஒழுக்கம்  தவறாத  நீதி  வழிப்
பட்டவர்களாகிய  (அந்த  மதுகைடவர்);  யாம் ஒரு நின் தொடையில்
படுகிற்றும்
 -  நாங்கள்  ஒப்பற்ற  உன்னுடைய  தொடையில் இறக்க
வல்லோம்; இடையில் படுகிற்கிலம்  எனத் துணியா - வேறு இடத்தில்
இறக்க  மாட்டோம்  என்று  துணிந்து (சொல்லி); அடையச் செய்கிற்றி
அது   ஆணை   எனா
 -  (நீ  எங்களை  உன்  தொடைக்குள்ளே)
அடையும்படி  செய்வாய்,  அது  (நீ  செய்யவேண்டிய) எங்களுடைய
ஆணை  என்று;  நல்குதலும் - (மேலும்) கூறுதலும் (தொடர் அடுத்த
பாடலில் முடியும்.)
 

நடை  - ஒழுக்கம்,  இடையில்  படுகிற்கிலம் - வேறு இடத்தில் சாக
மாட்டோம்.
 

                                                  (72)
 

7799.‘விட்டான், உலகு யாவையும், மேலொடு கீழ்,
எட்டா ஒருவன் தன் இடந் தொடையை;
ஒட்டாதவர் ஒன்றினர், ஊழ்வலியால்
பட்டார்; இது பட்டது பண்டு ஒருநாள்.*
 

எட்டா     ஒருவன் - மன வாக்குகளுக்குத் கோசரமாகாது கடந்து
நின்ற  திருமால்; உலகு  யாவையும்  மேலொடு கீழ் - மேலும் கீழும்
உள்ள  எல்லா  உலகங்களையும் (பொருந்தி நீண்டு செல்லுமாறு); தன்
இடந்தொடையை  விட்டான்
  -   தனது   இடத்தொடையை  (நீள)
விட்டான்; ஊழ் வலியால் - ஊழின் வலிமை