காரணமாக,; ஒட்டாதவர் ஒன்றினர் பட்டார் - பகைவர்களான மது கைடபர்கள் அத்தொடையில் அகப்பட்டுக் கொண்டார்கள்; இது பட்டது பண்டு ஒருநாள் - இது நிகழ்ந்தது முன் ஒரு காலத்தில். |
(73) |
| 7800. | ‘தனி நாயகன், வன் கதை தன் கை கொளா, நனி சாட, விழுந்தனர், நாள் உலவா; பனியா மது மேதை படப் படர் மே- தினி ஆனது, பூவுலகு எங்கணுமே. |
தனி நாயகன் - ஒப்பறு தலைவனாகிய (திருமால்); வன் கதை தன் கை கொளா - வலிய கதையைத் தன் கையில் கொண்டு; நனி சாட - நன்றாக மோதி அடிக்க; நாள் உலவா விழுந்தனர் - வாழ்நாள் உலந்து இறந்தனர்; பூவுலகு எங்கணுமே - (இந்த) பூமி முழுவதும்; பனியா மதுமேதை படப் - நடுக்கம் இல்லாத மதுவினுடைய கொழுப்புப் பட்டதால்; படர் மேதினி ஆனது - பரந்த மேதினி என்ற பெயரைப் பெறலாயிற்று. |
பனியால் நடுங்காத மேதை - கொழுப்பு. மது என்பவனுடைய உடம்பில் உள்ள ஏழுவகைத் தாதுக்களில் ஒன்றான மேதசு. மதுவின் மேதை பட்டதால் இந் நிலவுலகு மேதினி எனப் பெயர் பெற்றது என்க. கொளா - செய்யா என்னும் வாய்பாட்டு உடன்பாட்டு வினை எச்சம். நனிசாட - உரிச்சொல் தொடர். |
(74) |
| 7801. | ‘விதியால், இவ் உகம்தனில், மெய் வலியால் மது ஆனவன் எம்முன் மடிந்தனனால்; கதிர்தான் நிகர் கைடவன் இக் கதிர் வேல் அதிகாயன்; இது ஆக அறைந்தனெனால்.’ |
இவ் உகம் தனில் - இந்த யுகத்தில்; மெய் வலியால் மது ஆனவன் எம்முன் - உடல் வலி மிக்க மது என்பவன் ஆகிய என் அண்ணன் (கும்பகருணன்); விதியால் மடிந்தனனால் - ஊழ் வினையின் வலிமையால் இறந்து பட்டான்; கதிர்தான் நிகர் கைடவன் - கதிரவனை ஒத்துச் (சுட்டு எரிக்கும்) ஆற்றல் உள்ள கைடவன்; இக்கதிர் வேல் அதிகாயன் - இந்த ஒளி பொருந்திய வேல் ஏந்திய அதிகாயனாவன்; இது ஆக அறைந்தனெனால் - இச்செய்தியை மனத்தில் படுமாறு கூறினேன். |