நண்ணா - நெருங்குதற்கரிய, நண்ணுதல் - நெருங்குதல். ஆல் - அசை. |
(77) |
| 7804. | ‘வான் என்பது என்? வையகம் என்பது என் மால்- தான் என்பது என்? வேறு தனிச் சிலையோர், யான் என்பது என்? ஈசன் என இமையோர் கோன் என்பது என்?-எம்பி கொதித்திடுமேல்!* |
எம்பி கொதித்திடுமேல் - என் தம்பியாகிய (இலக்குவன்) சினம் கொள்வான் ஆனால்; வான் என்பது என் - வானத்துத் தேவர்கள் என்று கூறுவது என்ன? வையகம் என்பது என் - நிலவுலகத்தவர் என்பது என்ன? மால்தான் என்பது என் - திருமால் என்று கூறுவது தான் என்ன? வேறு தனிச்சிலையோர் தான் என்பது என் - (பிறரிடம் இருந்து) வேறுபட்ட சிறப்பான வில்லாளிகள் தான் என்ன?; ஈசன் என் இமையோர் கோன் என்பது என் - சிவபெருமான் என்பது என்ன? தேவர் தலைவனான இந்திரன் என்பது என்ன? |
எம்பி சினந்தால் யாரும் அவன் முன் எதிர்த்து நிற்க முடியாது என்றவாறு. வான், வையகம் இடவாகு பெயர்கள். ‘ஈசன் என்’ என்ற பாடம் ஏற்கப்பட்டுள்ளது. |
(78) |
| 7805. | ‘தெய்வப் படையும், சினமும், திறலும் மய் அற்று ஒழி மா தவம், மற்றும் எலாம், எய்தற்கு உளவோ-இவன் இச் சிலையில் கய் வைப்பு அளவே? இறல் காணுதியால். |
தெய்வப் படையும் - தெய்வத் தன்மை உள்ள படைக்கலங்களும்; சினமும் திறலும் - சினமும் வலிமையும்; மய் அற்று ஒழி மாதவம் - குற்றம் முழுதும் நீங்கிய பெருந்தவமும்; மற்றும் எலாம் - மற்றும் உள்ள பிற எல்லாமும்; எய்தற்கு உளவோ - வந்து அடைதற்கு உரியனவோ? இவன் - இந்த இலக்குவன்; இச்சிலையில் - இந்த வில்லில்; கய் வைப்பு அளவே - கையை வைத்த அளவிலே; இறல் காணுதியால் - (அவை) அழிந்து ஒழிதலைக் காண்பாய். |
திறல்-வலிமை, மய் - குற்றம், சிலை - வில், இறல் - அழிதல். |
(79) |