| 7806. | ‘என் தேவியை வஞ்சனை செய்து எழுவான் அன்றே முடிவான்; இவன், "அன்னவள் சொல் குன்றேன்" என ஏகிய கொள்கையினால் நின்றான் உளன் ஆகி;-நெடுந் தகையாய்! |
நெடுந்தகையாய் - பெருமைப் பண்புள்ளவனே! என் தேவியை வஞ்சனை செய்து எழுவான் அன்றே முடிவான் - என் தேவியை வஞ்சனை செய்து எடுத்துச் சென்ற இராவணன் அன்றே இறந்திருப்பான்; இவன் - இந்த இலக்குவன்; அன்னவள் சொல் குன்றேன் என ஏகிய கொள்கையினால் - அந்தச் சீதையினுடைய சொல்லை மீற மாட்டேன் என்று (பாதுகாத்த இடத்தை விட்டு) வெளியேறியதனால்; உளன் ஆகி நின்றான் - (அந்த இராவணன் இதுவரையில்) உயிர் உள்ளவன் ஆகி வாழ்ந்து நின்றான்; (இல்லை எனின் இறந்திருப்பான் என்றவாறு.) |
சீதை இறப்பேன் என்று கூறிய (கம்ப. 3331) சொற்களைக் கேட்டுப் பாதுகாவலை விட்டு இலக்குவன் போனதால் இராவணன் உயிர் பிழைத்தான். இல்லையாயின் இறந்து பட்டிருப்பான் என்றவாறு. |
(80) |
வீடணனை உடன் சென்று போரைக் காண இராமன் ஏவுதல் |
| 7807. | ‘ஏகாய், உடன் நீயும்; எதிர்த்துளனாம் மாகாயன் நெடுந் தலை வாளியொடும் ஆகாயம் அளந்து விழுந்ததனைக் காகாதிகள் நுங்குதல் காணுதியால். |
உடன் நீயும் ஏகாய் - இந்த இலக்குவனுடன் போர்க் களத்துக்கு நீயும் போவாய்; எதிர்த்துள்ளனாம் மாகாயன் நெடுந்தலை - இவனை எதிர்த்துள்ளவன் ஆகிய அதிகாயனுடைய பெரிய தலை; வாளியொடும் ஆகாயம் அளந்து விழுந்ததனை - (எய்யப்பட்ட) அம்போடு ஆகாயத்தை அளந்து (பூமியில்) விழுவதனை; காகாதிகள் நுங்குதல் காணுதியால் - காகம் முதலிய பறவைகள் கொத்தி உண்பதனைக் காண்பாய். |
நுங்குதல் - உண்ணுதல், ஆல் - அசை. |
(81) |
| 7808. | ‘நீரைக் கொடு நீர் எதிர் நிற்க ஒணுமே? தீரக் கொடியாரொடு தேவர் பொரும் |