பக்கம் எண் :

106யுத்த காண்டம் 

போரைக் கொடு வந்து புகுந்தது நாம்
ஆரைக் கொடு வந்தது? அயர்த்தனையோ?
 

நீரைக் கொடு நீர் எதிர் நிற்க ஒணுமோ - நீரைத் துணையெனக்
கொண்டு நீரை எதிர்த்து நிற்க முடியுமா? தீரக் கொடியாரொடு - மிகக்
கொடியவரான அரக்கர்களுடன்; தேவர்  பொரும்  போரைக்  கொடு
வந்து   நாம்   புகுந்தது
 -  தேவர்களுக்காகச்  செய்கிற  போரைக்
கைக்கொண்டு   வந்து  நாம்  போர்க்களம்  புகுந்தது;  ஆரைக்கொடு
வந்தது
   -   யாரைக்   துணையாகக்      கொண்டு    அமைந்தது;
அயர்த்தனையோ
- மனம் சலித்தனையோ?
 

அரக்கராகிய     நீரை அழித்து வற்றச் செய்யவல்லவன் இலக்குவன்
என்றபடி.  ஆரைக்  கொடு  வந்தது  -  அறம்  தவிரப்  பிற துணை
இல்லை என்றபடி. கொடு, ஒணுமோ - இடைக்குறைகள்.
 

                                                  (82)
 

7809.சிவன்; அல்லன்எனில், திருவின் பெருமான்;
அவன் அல்லன்எனில், புவி தந்தருளும்
தவன்; அல்லன்எனில், தனியே வலியோன்
இவன்; அல்லன்எனில், பிறர் யார் உளரோ?
 

சிவன்     அல்லன் எனில் - (இந்த அதிகாயனைக் கொல்வதற்கு
உரியவர்)  சிவபிரான் அல்லன் என்றால்; திருவின் பெருமான் அவன்
அல்லன்  எனின்
 -  திருமகள்   தலைவனாகிய  திருமால்  அல்லன்
என்றால்; புவி தந்தருளும்  தவன்  அல்லன்  எனில் - நிலவுலகைப்
படைத்தவன்   ஆகிய    தவச்   சிறப்புடைய  பிரமதேவன்  அல்லன்
என்றால்;   தனியே   வலியோன்   இவன்   அல்லன்  எனில் -
தனிச்சிறப்புடைய  வலிமை  படைத்த   இந்த  இலக்குவன்   அல்லன்
என்றால்; பிறர் யார் உளர் - மற்றவர் எவர் தாம் உளர்.
 

சிவனும்,  மாலும்,   பிரமனும்   தனி   வலி   இலக்குவனும்  தவிர
இவ்வதிகாயனைக் கொலற்கு உரியவர் யார் உளர் என்றவாறு.
 

                                                  (83)
 

7810.‘ஒன்றாயிர வெள்ளம் ஒருங்கு உள ஆம்
வன் தானையர் வந்து வளைந்த எலாம்
கொன்றான் இவன் அல்லது, கொண்டு உடனே
நின்றார் பிறர் உண்மை நினைந்தனையோ?