பக்கம் எண் :

 அதிகாயன் வதைப் படலம் 107

ஒருங்கு     உள ஆம் - (கும்பகருணன் உடன்) ஒருங்கு சேர்ந்து
வந்து; ஒன்றாயிர வெள்ளம் வன் தானையர் வந்து விளைந்த எலாம்
- ஒன்றாயிரம்  வெள்ளம்  வலிய படை வீரர்கள் (தன்னை) வளைத்துக்
கொண்டபோது (அவர்கள்) எல்லாரையும்; கொன்றான் இவன் அல்லது
-  கொன்றவன்  ஆகிய இந்த இலக்குவன் அல்லது; கொண்டு உடனே
நின்றார் பிறர்  உண்மை நினைந்தனையோ
- (எதிர்த்து) இவனுக்குத்
துணையெனக்  கொண்டு நின்றவர் பிறர் எவரும் இல்லை என்பதனை
எண்ணினாயோ?
 

கும்பகருணனுடன்  வந்த  பெரும்  அரக்கர்  படையை  இலக்குவன்
துணைவர் யாரும் இன்றி அழித்தான் என்க.
 

                                                  (84)
 

7811.‘கொல்வானும் இவன்; கொடியோரை எலாம்
வெல்வானும்  இவன்; அடல் விண்டு என
ஒல்வானும் இவன்; உடனே ஒரு நீ
செல்வாய்’ என ஏவுதல் செய்தனனால்.
 

கொடியோரை     எலாம்    -     கொடிய      அரக்கர்களை
எல்லாம்; கொல்வானும்   இவன்  - கொல்லப்  போகின்றவன்  இந்த
இலக்குவன்; வெல்வானும்  இவன்  -  (அவ்வாறு  கொன்று)  வெற்றி
பெறப்   போகின்றவன்  இந்த  இலக்குவன்;   அடல்  விண்டு  என
ஒல்வானும்  இவன்
 - வலிமை பொருந்திக் கொல்லும் தன்மை உள்ள
திருமால்    போல    எதிர்த்துப்    போர்    செய்பவனும்   இந்த
இலக்குவன்; உடனே  ஒரு  நீ செல்வாய் என - எனவே விரைவாக
ஒப்பற்ற  நீ  இவனுடனே  செல்வாய் என்று; ஏவுதல் செய்தனனால் -
இராமன் வீடணனை ஏவினான்.
 

அடல்  -  அழித்தல்,  கொடியோர்  -  வினையாலணையும்  பெயர்.
ஆல் - அசை.
 

                                                  (85)
 

                     இலக்குவன் வீடணனுடன் போர்க்களம் புகுதல்
 

7812.அக் காலை இலக்குவன் ஆரியனை
முக் காலும் வலம் கொடு, மூதுணர்வின்
மிக்கான், அடல் வீடணன் மெய் தொடரப்
புக்கான், அவன் வந்து புகுந்த களம்.