அக்காலை - அப்பொழுது; இலக்குவன் ஆரியனை முக்காலும் வலம் கொடு - இலக்குவன் இராமபிரானை மும்முறை வலம் வந்து; மூதுணர்வின் மிக்கான் அடல் வீடணன் - அற உணர்வு மிக்கவன் ஆகிய வலிய வீடணன்; மெய் தொடர - தன்னைத் தொடர்ந்து வர; புக்கான் அவன் வந்து புகுந்த களம் - அந்த அதிகாயன் வந்து புகுந்த போர்க் களத்துக்குட் புகுந்தான். |
மும்முறை வலம் வருதல் - மனோ வாக்குக் காயங்களில் தண்டம் சமர்ப்பித்தல். முதல் இரண்டு அடிகளுக்குப் "பெருமாளுக்குத் தாம் சேஷமாயிருப்பதையும், பெருமான் நியமனமே தமக்கு உத்தாரக மென்பதையும், தம்முடைய பாரதந்திரிய சொரூபத்தையும் பிரகாசப்படுத்தப் பெரிய பெருமாளாகிய தமது ஆசிரியரை வாசிக காயிக மாநஸிகமாகிய மூன்று கரணங்களாலும் தண்டஞ் சமர்ப்பித்தார் இளைய பெருமாள் என்று முன்னிரண்டு அடிகட்குக் கருத்து அளிப்பர் என்பர், வை.மு.கோ. |
(86) |
இரு பக்கத்துச் சேனைகளும் நெருங்கிப் பொருதல் |
| 7813. | சேனைக் கடல் சென்றது, தென் கடல்மேல் ஏனைக் கடல் வந்தது எழுந்தது எனா; ஆனைக் கடல், தேர், பரி, ஆள், மிடையும் தானைக் கடலோடு தலைப்படலும். |
தென் கடல் மேல் ஏனைக் கடல் வந்தது எழுந்தது எனா - தென் கடலின் மீது பிற கடல்கள் வந்து போருக்கு எழுந்தது என்று கூறும்படி; ஆனைக் கடல், தேர் பரி ஆள் மிடையும் தானைக் கடலோடு - யானைக் கடலும் தேரும் குதிரையும் காலாட்படையும் கலந்த அரக்கரின் சேனைக் கடலோடு; சென்றது சேனைக் கடல் தலைப்படலும் - இலக்குவன் உடன் சென்ற (வானர) சேனைக் கடல் போரைத் தொடங்குதலும் அடுத்த பாட்டில் பொருள் முடியும். |
இரு படைகளும் போர் தொடங்கின. தேர் பரி ஆள் - உம்மைத் தொகை. சேனைக்கடல், ஆனைக்கடல், தானைக் கடல் - உருவகங்கள். |
(87) |
கலி விருத்தம் (வேறு) |
| 7814. | பசும் படு குருதியின் பண்டு சேறுபட்டு, அசும்பு உற உருகிய, உலகம் ஆர்த்து எழ, |