பக்கம் எண் :

 மாயா சனகப் படலம் 11

"மறந்தன பெரிய; போன வரும்" மருந்து தன்னால்,
இறந்து இறந்து உய்கின்றேன் யான்; யார் இது தெரியும்
                                      ஈட்டார்?

அறந்தரும்     செல்வம்  அன்னீர்  -  அறவழியில்  கிடைத்த
செல்வத்தை  ஒத்துள்ளவரே!  அமிழ்தினும் இனியீர் - அமிழ்தத்தைக்
காட்டிலும்  இனிமை  வாய்ந்தவரே!  என்னைப்  பிறந்திலன்  ஆக்க
வந்தீர்
 -  என்னைப்  பிறக்காதவன்  போல் செய்ய வந்தவரே! பேர்
எழில்  மானம்  கொல்ல
 -  நுமது பேரழகு என் மானத்தை அழிக்க;
பெரிய  மறந்தன  போன  -  நான் செய்த பெருஞ்செயல்கள் மறந்து
விட்டன; வரும் எனும் மருந்து தன்னால் - நீர் இரங்கும் நாள் வரும்
என்னும் மருந்தினால்;  யான்  இறந்து இறந்து உய்கின்றேன் - யான்
செத்துச்  செத்துப்  பிழைக்கின்றேன்;  யார்  இது தெரியும் ஈட்டார் -
எனது இந்தத் தன்மையை அறியும் தன்மையுடையவர் யார்?

நீர்     மனம் இரங்கி  எனக்கு  அருள் தர வேண்டும் என்கிறான்
இராவணன்.  பெரிய  -  பெருஞ்செயல்கள்.  போன - மறந்து விட்டன.
பேர்  எழில்  மானம் கொல்ல பெரிய  மறந்தன போன என இயைக்க.
இறந்து இறந்து - அடுக்குத்தொடர்.

                                                 (15)

7647.

‘அந்தரம் உணரின், மேல்நாள், அகலிகை என்பாள், காதல்
இந்திரன் உணர்த்த, நல்கி எய்தினாள் இழுக்குற்றாளோ?
மந்திரம் இல்லை, வேறு ஓர் மருந்து இல்லை, மையல்
                                     நோய்க்குச்
சுந்தரக் குமுதச் செவ்வாய் அமுது அலால்;-அமுதச்
                                     சொல்லீர்!

அமுதச்    சொல்லீர்  -  அமுதம்  போன்ற  இனிய  சொல்லை
உடையவரே!  அந்தரம்  உணரின்  -  நடு நிலைமையோடு எண்ணிப்
பார்த்தால்; மேல்நாள்  - முன் ஒரு காலத்தில்; அகலிகை என்பாள் -
அகலிகை என்ற  பெயர்  உடையவள்;  காதல் இந்திரன் உணர்த்த -
தனது  காதலை இந்திரன்  உணர்த்த; நல்கி எய்தினாள் - அவனுக்குத்
தன்னைக்   கொடுத்து   இன்பம்  அடைந்தாள்;   இழுக்குற்றாளோ -
அதனால்  அவள்  தாழ்நிலையை அடைந்தாளோ?  (இல்லையல்லவா?)
மையல் நோய்க்கு -