பக்கம் எண் :

12யுத்த காண்டம் 

என்னுடைய   காமமாகிய நோயைப்  போக்குவதற்கு;  சுந்தரக் குமுதச்
செவ்வாய்  அமுது  அலால்
 -  அழகிய  குமுதமலர் போன்ற உமது
சிவந்த  வாய் அமுதமல்லது;  வேறு  மந்திரம்  இல்லை ஓர் மருந்து
இல்லை
 -  வேறு  மந்திரமும்  இல்லை  ஒப்பற்ற   வேறு மருந்ததும்
இல்லை.
 

பெண்டிர்     பிற ஆடவருடன் கூடல் தவறு இல்லை என்பதை
வலியுறுத்த   இராவணன்  அகலிகை  கதையைக்  குறிப்பிடுகின்றான்.
அகலிகை  பற்றிய  கம்பர்  கருத்தோவியம்  அகலிகைப்  படலத்துள்
காண்க.  (பாலகாண்டம் ஒன்பதாம் படலம்.) நோயைப் போக்கவல்லன
மந்திரம்   மருந்து   மணி   என்பன.  இரண்டைக்  கூறி  மணியை
உபலட்சணத்தால் பெற வைத்தார். அந்தரம் - நடுநிலைமை.
 

                                                (16)

                 சீதையின் முன் இராவணன் விழுந்து வணங்குதல்
 

7648.

என்று உரைத்து, எழுந்து சென்று, அங்கு இருபது என்று
                                 உரைக்கும் நீலக்
குன்று உரைத்தாலும் நேராக் குவவுத் தோள் நிலத்தைக்
                                           கூட,
மின் திரைத்து, அருக்கன் தன்னை விரித்து, முன் தொகுத்த
                                        போலும்
நின்று இமைக்கின்றது அன்ன முடி படி நெடிதின் வைத்தான்.
 

என்று உரைத்து - என்று  பலவாறு  சொல்லி;  அங்கு  எழுந்து
சென்று 
- அங்கு  எழுந்து  போய்;  இருபது  என்று உரைக்கும் -
இருபது என்று சொல்லப்படுகிற; நீலக்குன்று உரைத்தாலும் - நீல  நிற
மலையை  உவமை சொன்னாலும்;  நேரா  - ஒவ்வாத;  குவவுத்தோள்
நிலத்தைக்கூட
- திரண்ட தோள்கள் நிலத்தைத் தடவ; மின் திரைத்து
-  மின்னலைச்  சுருட்டி;  அருக்கன்  தன்னை  விரித்து - கதிரவன்
தன்னை  ஒளி  பரப்புமாறு வைத்து; முன் தொகுத்த போலும் - முன்
ஒரு  திரளாகத் தொகுத்து  வைத்து; நின்று இமைக்கின்றது அன்ன -
நிலைத்து  நின்று  ஒளியை  வெளிப்  படுப்பது   போன்ற;  முடி படி
நெடிதின்  வைத்தான்
 -  மௌலியை  நிலத்தின்  மீது  வெகுநேரம்
வைத்தான்.
 

மகுடத்தின்   பேரொளி  அருக்கன்  தன்னை  விரித்தது  போலவும்
அம் மகுடத்தில் உள்ள மணிகளின் ஒளி மின் திரைத்தது போலவும்