பக்கம் எண் :

 மாயா சனகப் படலம் 13

இருந்தது  என்க.  திரைத்து  -  சுருட்டி,  படி  - நிலம். நெடிதின் -
நீண்ட நேரம்.
 

                                                 (17)
 

                  சீதை இராவணனுக்குத் தன் கருத்தை உரைத்தல்
 

7649.

வல்லியம் மருங்கு கண்ட மான் என மறுக்கமுற்று,
மெல்லியல் ஆக்கை முற்றும் நடுங்கினள், விம்முகின்றாள்,
‘கொல்லிய வரினும், உள்ளம் கூறுவென், தெரிய’ என்னா,
புல்லிய கிடந்தது ஒன்றை நோக்கினள், புகல்வதானாள்:
 

மெல்லியல்  - மெத்தென்ற சாயலை உடைய சீதை; (இராவணனைத்
தன்  அருகே   பார்த்து)  வல்லியம்  மருங்கு  கண்ட  மான் என
மறுக்கமுற்று
- புலியைத் தன் பக்கத்தில் கண்ட மான் போலக்கலக்கம்
அடைந்து; ஆக்கை முற்றும்  நடுங்கினள் விம்முகின்றாள் - உடம்பு
முழுவதும்  நடுங்கி  விம்மிப்  புலம்பி;  கொல்லியவரினும் - என்னை
அவன்  கொல்லும்  படிக்கு  வந்தாலும்; உள்ளம் தெரியக் கூறுவென்
என்னா
 -  என்  மனதில்  உள்ள   கருத்தை  நன்றாக   அறியும்படி
கூறுவேன்  என்று எண்ணி;  கிடந்தது  புல்லிய  ஒன்றை - அருகில்
தரையில்   கிடந்த   புன்மையான   (துரும்பு)  ஒன்றை;  நோக்கினள்
புகல்வதானாள்
- நோக்கிக் கூறலானாள்.
 

இராவணனுடன்  பேசுவது தன் கற்புத் திண்மைக்கு இழுக்கு எனக்
கருதிச்  சீதை  துரும்பைப்  பார்த்துப்  பேசுகிறாள்.  ‘ஒரு துரும்பை
விடத்  தாழ்ந்து விட்டாய்’ என்பதால் அவ்வாறு துரும்பைப் பார்த்துப்
பேசினாள்  எனலுமாம்.  நடுங்கினள்,  நோக்கினள் - முற்றெச்சங்கள்.
கொல்லிய - செய்யிய என்னும் வாய்பாட்டு வினை எச்சம்.
 

                                                (18)
 

7650,

‘ ”பழி இது; பாவம்” என்று பார்க்கிலை; “பகரத் தக்க
மொழி இவை அல்ல” என்பது உணர்கிலை; முறைமை
                                     நோக்காய்;
கிழிகிலை நெஞ்சம்; வஞ்சக் கிளையொடும் இன்றுகாறும்
அழிகிலை என்றபோது, என் கற்பு என் ஆம்? அறம்தான்
                                    என் ஆம்?