பக்கம் எண் :

14யுத்த காண்டம் 

இது  பழி பாவம் என்று பார்க்கிலை  -  நீ  செய்ய  விரும்பிய
செயலால்  பழிவரும்  பாவம்   வரும்   என்று  எண்ணிப்  பார்த்தாய்
அல்லை;  பகரத் தக்க மொழி  இவை  அல்ல  -  உம் போன்றவர்
சொல்லத்தக்க   சொற்கள்  இவை  அல்ல;  என்பது  உணர்கிலை -
என்பதை  நீ  அறிந்தாய்  அல்லை;  முறைமை நோக்காய் - யாரிடம்
எவ்வாறு  நடந்து  கொள்ள  வேண்டும் என்ற  முறையையும் எண்ணிப்
பார்த்தாய்  அல்லை;  கிழிகிலை  நெஞ்சம்  -  இவ்வாறு  முறையற்ற
செயல்  செய்தும்  முறையற்ற   சொல்லைச்  சொல்லியும்   கூட  உன்
நெஞ்சம்  கிழிந்து  பிளவுபடவில்லை;  வஞ்சக்  கிளையொடும் - உன்
வஞ்சனைக்கு  உதவும்  சுற்றத்தவருடன்;  இன்று காறும் அழிகிலை -
இன்று  வரை  நீ அழியவில்லை; என்ற போது - என்றால்; என் கற்பு
என் ஆம்
- என் கற்பின் வலிமை என்ன ஆகும்? அறம் தான் என்
ஆம்
- அறம் தான் என்னவாகும்?
 

வாய்  வந்தன  சொல்லி, மனம்  உவந்தன செய்யும்  நீ முறைமை
நோக்காது   செயல்படுகிறாய்,   உன்   நெஞ்சு   கிழிபட,  உறவினர்
அழிந்தால்  அன்றோ என் கற்பு பயன் பெற்றதாகவும், அறம் உலகில்
மேம்பட்டதாகவும் ஆகும் என்கிறாள் சீதை.
 

                                                (19)
 

7651.

‘வான் உள அறத்தின் தோன்றும் சொல்வழி வாழு
                                       மண்ணின்
ஊன் உள உடம்புக்கு எல்லாம் உயிர் உள; உணர்வும்
                                       உண்டால்;
தான் உள, பத்துப் பேழ் வாய், தகாதன உரைக்கத் தக்க,
யான் உளென் கேட்க என்றால், என் சொலாய்? யாது
                                      செய்யாய்?
 

வான் உள - வானம் உளது; அறத்தின் தோன்றும் சொல் வழி -
அறத்திற்கு உட்பட்டுத் தோன்றும் சொல்லின் படி;  மண்ணின் வாழும்
ஊன்   உள
 -  நிலவுலகில்  வாழும்  தசையால்  போர்த்தி  உள்ள;
உடம்புக்கு  எல்லாம் உயிர்  உள  -  உடம்பு  படைத்தவைகளுக்கு
எல்லாம்   உயிர்   உள்ளன;  உணர்வும்  உண்டு  -  அவைகளுக்கு
நல்லுணர்வும்  உண்டு,  (எனினும்   அவை  உன்னைப் போல்  நடந்து
கொள்வதும்  பேசுவதும் இல்லை); தகாதன உரைக்கத்தக்க - உனக்குத்
தகுதி  இல்லாத சொற்களைச் சொல்லுவதற்கு; பத்துப் பேழ்வாய் தான்
உள
- பிளவுபட்ட