பத்துவாய்கள் உள்ளன; கேட்க யான் உளன் - நீ சொல்லும் கொடிய சொற்களைக் கேட்க நான் உள்ளேன்; என்றால் - என்றால்; என் சொலாய் - எதைத்தான் (நீ) சொல்லமாட்டாய்; யாது? செய்யாய் - எதைத்தான் செய்ய மாட்டாய். |
தகாதன - இராவணன் கூறிய சொற்களைத் திருப்பிச் சொல்லக் கூசி ஆவி குலைவுறும் நிலையில் கூறியது. உடம்பு - உடம்புள்ளவைகளுக்கு; ஆகு பெயர், தான் - அசை. |
(20) |
7652. | ‘வாசவன், மலரின் மேலான், மழுவலான் மைந்தன், மற்று அக் கேசவன் சிறுவர் என்ற இந்தத் தன்மையோர்தம்மைக் கேளாய்; ‘பூசலின் எதிர்ந்தேன்’ என்றாய்; போர்க்களம் புக்க போது, என் ஆசையின் கனியைக் கண்ணின் கண்டிலை போலும் அஞ்சி, |
வாசவன் - இந்திரன்; மலரின் மேலான் - தாமரை மலரில் வீற்றிருப்பவனாகிய பிரமன்; மழுவலான் மைந்தன் - மழுப்படைய உடைய சிவபிரான் மகனாகிய முருகவேள்; கேசவன் சிறுவர் என்ற - மற்றும் கேசி என்ற அசுரனை அழித்த கேசவன் பிரமன் சிவன் என்ற; இந்தத் தன்மையோர் தம்மைக் கேளாய் - இந்தப் பெருமை பெற்றவர்களின் பேராற்றலைக் கேட்டிடாமல்; (கவலை கொள்ளாமல்) பூசலின் எதிர்ந்தேன் என்றாய் - அவர்களைப் பெரும் போரில் எதிர்த்து வென்றேன் என்கிறாய்; என் ஆசையின் கனியை - என் பேர் ஆர்வத்தில் முதிர்ந்த பழம் போன்ற இராமனை; போர்க்களம் புக்க போது - போர்க்களம் புகுந்த வேளையில்; அஞ்சிக் கண்ணின் கண்டிலை போலும் - அஞ்சிக் கண்ணால் காணவில்லை போலும். |
கண்ணின் கண்டிலை போலும் - அவனைக் கண்ணால் கண்டிருந்தால் உனக்கு நல்லறிவு வந்திருக்கும், (அல்லது) அவன் அம்பால் மாண்டு போய் இருப்பாய், அவ்வாறு கண்ணால் காணாததால் தான் நீ உயிரோடு இருந்தும் நல்லறிவு பெறாது (அ) இறந்து படாது வாய் தரத் தக்க சொல்லி நிற்கிறாய். ஆசையின் கனி - பேரார்வத்தின் முதிர்ந்த கனி; ஈண்டு இராமன். |
(21) |