பக்கம் எண் :

 அதிகாயன் வதைப் படலம் 193

பலி     - பிறர் தரப் பெறும் உணவு, மிடுக்கு - வலிமை, பேணி -
பெரிதென  எண்ணி,  நோன்மை  -  வலிமை,  ஒல்குதல் - தளர்தல்.
பித்தன்  என்று  கூறுவது வெறும் வாய்ப் பேச்சாலும் தேரில் பூட்டிய
பேய்களைக்  கொண்டும்  (228)  வெல்ல  வந்தவனை  இகழ்ந்ததாம்.
நோய்  கண்டு மருந்து செய்யா ஒருவ என்றது அரக்கரின் அழிவுக்குக்
காரணம்  இராவணன்  சீதை  மீது  கொண்ட காதல் என்ற நோயைக்
கண்டு  அதற்குச்  சீதையை  விட்டிடுதலே  மருந்து  என  உணராத
ஒருவனே என்றபடி.
 

                                               (231)
 

7958.‘"ஓடுதி" என்ன, ஓடாது உரைத்தியேல், உன்னோடு இன்னே
ஆடுவென் விளையாட்டு’ என்னா, அயில் எயிற்று அரக்கன்,
                                       அம் பொன்
கோடு உறு வயிரப் போர் வில் காலொடு புருவம் கோட்டி,
ஈடு உற, இடபன் மார்பத்து ஈர்-ஐந்து பகழி எய்தான்.

 

அயில் எயிற்று அரக்கன் - வேல் போலக் கூர்மையான பற்களை
உடைய வயமத்தன்; ஓடுதி என்ன - (நான்) ஓடிப்போ என்று சொல்ல;
ஓடாது உரைத்தியேல் - ஓடாமடல் (எதிர்த்துச்) சொல்லுவாய் ஆனால்;
உன்னோடு  - உன்னுடன்;  இன்னே  - இப்பொழுதே; விளையாட்டு
ஆடுவென்
  -  விளையாட்டு  விளையாடுவேன்;  என்னா -  என்று
சொல்லி; அம்பொன் கோடு உறு  வயிரப்  போர்  வில் - அழகிய
பொன்மயமான   மேருமலையை  ஒத்த   (தன்னுடைய)   வலிமையான
போரிடும்  வில்லின்; காலொடு புருவம் கோட்டி - முனைகளோடு தன்
புருவத்தையும்  வளைத்து; ஈடு உற - வலிமை மிக; இடபன் மார்பத்து
-   இடபனுடைய  மார்பின்  கண்ணே;  ஈர்  ஐந்து  பகழி  -  பத்து
அம்புகளை; எய்தான் - எய்தான்.
 

அயில்   - வேல், அம்பொன் கோடு - மேருமலை, கால் முனை, ஈடு
-  வலிமை,  பெருமையுமாம்,  விளையாட்டு  - உன்னுடன் போரிடல்
எனக்கு விளையாட்டு என்பது பட வந்தது. உறு - உவம உருபு.
 

                                                 (232)
 

7959.அசும்புடைக் குருதி பாயும் ஆகத்தான், வேகத்தால் அத்
தசும்புடைக் கொடுந் தேர்தன்னைத் தடக் கையால் எடுத்து
                                             வீச,