பக்கம் எண் :

194யுத்த காண்டம் 

பசுங் கழல் கண்ண பேயும் பறந்தன, பரவை நோக்கி;
விசும்பிடைச் செல்லும் காரின் தாரைபோல் நான்ற
                                      மெய்யான்.

 

அசும்புடைக்  குருதி பாயும் ஆகத்தான் - ஊற்றுப் பெருக்கைப்
போல்  இரத்தம்  (வெளியில்)  கொட்டுகிற  உடம்பை உடையவனாகிய
(இடபன்);  வேகத்தால்- விரைவோடு; அத் தசும்புடைக் கொடுத்தேர்
தன்னை
  -   அந்தக்   கலசம்  அமைந்த  பெரிய  தேர்  தன்னை;
தடக்கையால்  எடுத்து  வீச  - தன்  வலிய கையினால் எடுத்து வீசி
எறிய;  பசுங்கழல்  கண்ண  பேயும் - (அத்தேரில் பூட்டப்பட்டிருந்த)
பசுமையான  கழற்சிக்  காய்  போன்ற  கண்களை   உடைய (ஆயிரம்)
பேய்களும்;  பரவை  நோக்கிப்  பறந்தன - கடலை நோக்கிப் பறந்து
சென்றன; விசும்பிடைச் செல்லும் காரின் தாரை போல்-(அத்தேரின்
மேல்  இருந்த வயமத்தன்) விண்ணில் செல்லும் மேக ஒழுங்கு போல்;
நான்ற மெய்யான் - தொங்குகின்ற உடலை உடையவன் ஆனான்.
 

அசும்பு     - ஊற்றுப் பெருக்கு, தசும்பு - மிடா. ஈண்டுத் தேர்க்
கவசம்  என்க.  பசுங்கழல்கண்  -  பசிய கழற்சிக்காய் போலும் கண்.
பேயின் கண்களுக்குக் கழற்சிக்காயினை உவமை கூறுதல் மரபு. பரவை
-  கடல்.  கார்  -  மேகம்,  தாரை - ஒழுங்கு, நாலுதல் - (ஞாலுதல்)
தொங்குதல்.   ஞாலம்   என்ற   பெயர்  இதனால்  வந்தது  என்பர்.
நாணுட்டுச் செத்தான் என்ற பேச்சு வழக்கையும் எண்ணுக.
 

                                                (233)
 

7960.தேரொடும் கடலின் வீழ்ந்து, சிலையும் தன் தலையும்
                                        எல்லாம்
நீரிடை அழுந்தி, பின்னும் நெருப்பொடு நிமிர வந்தான்
பாரிடைக் குதியாமுன்னம்,, இடபனும், ‘பதக! நீ போய்
ஆரிடைப் புகுதி!’ என்னா, அந்தரத்து ஆர்த்துச்
                                     சென்றான்.

 

தேரொடும்     - தேருடன்;  கடலின் வீழ்ந்து - கடலில் விழுந்து;
சிலையும்  -  வில்லும்;  தன்தலையும் எல்லாம் - தன் தலையும் (பிற)
எல்லாமும்;  நீரிடை  அழுந்தி  -  கடல்  நீரிலே  அழுந்தி; பின்னும்
நெருப்பொடு நிமிர வந்தான்
- மறுபடியும் பெருஞ்சினத்தோடு