பக்கம் எண் :

196யுத்த காண்டம் 

மரம்  கொடும்,  தண்டு  கொண்டும்,  மலை  என
                                  மலையாநின்றார்;
சிரங்களும் கரமும் எல்லாம் குலைந்தனர், கண்ட தேவர்.

 

குரங்கினுக்கு   அரசும் - குரங்குகளுக்கு அரசனாகிய சுக்ரீவனும்;
வென்றிக்கும்பனும்  -  வெற்றி  உடைய  கும்பன் என்னும் (அரக்கர்
தலைவனும்);   குறித்த  வெம்போர்   -  (அங்குக்)குறித்துச்  செய்த
கொடியபோர்;  அரங்கினுக்கு அழகுசெய்ய - அப்போர்க் களத்திற்கு
அழகினைச்  செய்ய;  ஆயிரம் சாரி  போந்தார் -  ஆயிரம் முறை
(என்னும்  அளவு)  வலசாரி,  இடசாரியாகச்   சுற்றிச் சுற்றிவந்தார்கள்;
மரம்கொடும் - (அவர்கள்) மரத்தைக் கொண்டும்; தண்டுகொண்டும்-
தண்டாயுதம் கொண்டும்; மலைஎன  மலையாநின்றார் - இருமலைகள்
போரிடுவது     போல்    போரிட்டார்கள்;     கண்டதேவர்    -
அச்செயலைக்கண்ட   தேவர்கள்;  சிரங்களும்   கரமும்  எல்லாம்
குலைந்தனர்
- தலையும் கைகளும் எல்லாம் நடுங்கினர்.
 

கும்பன்  - கும்பகருணன் மக்கள் இருவரில் ஒருவன், மற்றொருவன்
நிகும்பன். அரங்கு - போர்க்களம், சாரிபோதல் - இடவலமாகத்திரிதல்.
 

                                                 (236)
 

கலிவிருத்தம்
 

7963.கிடைத்தார், உடலில் கிழி சோரியை வாரித்
துடைத்தார், விழியில் தழல் மாரி சொரிந்தார்,
உடைத் தாரொடு பைங் கழல் ஆர்ப்ப உலாவிப்
புடைத்தார், பொருகின்றனர்-கோள் அரி போல்வார்.

 

கோளரி போல்வார் - வலிமையான சிங்கத்தைப் போன்றவர்களான
(சுக்ரீவ    கும்பர்கள்);    கிடைத்தார்    -    ஒருவரை    ஒருவர்
நெருங்கியவர்களாய்; உடலில் கிழி  சோரியை  வாரித்துடைத்தார் -
உடலில்  கிழிசல்  (ஏற்பட்டு  அதிலிருந்து)  பெருகிவருகிற இரத்தத்தை
வாரித்துடைத்தார்கள்; விழியில் தழல் மாரி சொரிந்தார் - கண்களில்
நெருப்பு மழையைப் பொழிந்தார்கள்;  உடைத்தாரொடு - அணிந்துள்ள
மாலையோடு;  பைங்கழல்  ஆர்ப்ப - பசும்பொன்னால் செய்யப்பட்ட
வீரக்  கழல்கள்  ஒலிக்க;  உலாவிப்  புடைத்தார்  - இங்கும் அங்கும்
நகர்ந்து