அடித்துக் கொண்டவர்களாய்ப்; பொருகின்றனர் - போர்செய்கின்றனர்,
| (237)
| 7964. | தண்டம் கையில் வீசிய தக்க அரக்கன், அண்டங்கள் வெடிப்பன என்ன, அடித்தான்; கண்டு, அங்கு, அது மா மரமே கொடு காத்தான்; விண்டு அங்கு அது தீர்ந்தது; மன்னன் வெகுண்டான்;
| தண்டம் கையின் வீசிய - தண்டாயுதத்தைக் கையில் எடுத்துச் சுழற்றிய; தக்க அரக்கன் - (போர்த்தொழில்) தகுதியுள்ள அரக்கனாகிய கும்பன்; அண்டங்கள் வெடிப்பன என்ன அடித்தான் - அண்டங்கள் எல்லாம் வெடிக்கின்றன என்று கண்டோர் எண்ணும்படி பேரொலி எழச் (சுக்ரீவனை) அடித்தான்; அங்கு அதுகண்டு - அப்போது அந்தச் செயலைக்கண்டு; மாமரமே கொடு காத்தான் - (சுக்ரீவன்) பெரியமரத்தைக் கொண்டு (அடி தன் மீது விழாதபடி) காத்துக் கொண்டான்; அங்கு அது விண்டு தீர்ந்தது - அப்போது அப்பெரியமரம் துண்டாகி அழிந்தது; மன்னன் வெகுண்டான் - (அதைக்கண்டு) மன்னனாகிய சுக்ரீவன் சினம் கொண்டான்.
| (238)
| 7965. | ‘பொன்றப் பொருவேன், இனி’ என்று, பொறாதான், ஒன்றப் புகுகின்றது ஓர் காலம் உணர்ந்தான், நின்று அப் பெரியோன் நினையாதமுன், நீலன் குன்று ஒப்பது ஓர் தண்டு கொணர்ந்து கொடுத்தான்.
| பொறாதான் - மனம் பொறுக்காதவன் ஆகிய சுக்ரீவன்; இனி - இனி; பொன்றப் பொருவேன் என்று - (நீ) இறக்கும்படி போர் செய்வேன் என்று கூறி; ஒன்றப் புகுகின்றது - மும்முரமாய்ப் போரிடப் போகின்ற; ஓர் காலம் உணர்ந்தான் - ஒரு காலத்தை எண்ணியவனாய்; அப்பெரியோன் நின்று - அந்தப் பெருமை மிக்க சுக்ரீவன் நின்று; நினையாதமுன் - நினையாததற்கு முன்பே; நீலன் - நீலன்; குன்று ஒப்பது ஓர் தண்டு - குன்றினை ஒத்த ஒப்பற்ற தண்டாயுதம் ஒன்றினைக்; கொணர்ந்து கொடுத்தான் - கொண்டு வந்து கொடுத்தான். |
|
|
|