பக்கம் எண் :

 அதிகாயன் வதைப் படலம் 199

7968.தோளில் புடையுண்டு அயர் சூரியன் மைந்தன்,
தாளில் தடுமாறல் தவிர்ந்து, தகைந்தான்,
வாளிக் கடு வல் விசையால் எதிர் மண்டி,
ஆளித் தெழில் அன்னவன் மார்பின் அறைந்தான்.

 

தோளில்    புடையுண்டு - தோளில் அடியுண்டு; அயர் சூரியன்
மைந்தன்
  -  வருந்துகிற  கதிரவன்  மகனாகிய  சுக்ரீவன்;  தாளில்
தடுமாறல்   தவிர்ந்து
 -  (அவனைக்  கொல்லும்)  தன்  முயற்சியில்
தடுமாறுதலைத் தவிர்த்து; வாளிக் கடுவல் விசையால் -அம்பு போன்ற
கடுமையான  அதிகவேகத்தோடு; எதிர் மண்டி தகைந்தான் - (அந்தக்
கும்பனுக்கு) எதிரே சென்று நெருங்கி; ஆளித் தொழில் அன்னவன் -
யாளியின்  வீரம் போன்ற வீரத்தொழிலை உடைய (அக்கும்பனுடைய);
மார்பின் அறைந்தான் - மார்பில் அறைந்தான்.
 

                                                 (242)
 

7969.அடி ஆயிர கோடியின் மேலும் அடித்தார்;
‘முடிவு ஆனவன் யார்?’ என, வானவர் மொய்த்தார்;
இடியோடு இடி கிட்டியது என்ன, இரண்டும்
பொடியாயின தண்டு; பொருந்தினர் புக்கார்.

 

ஆயிர   கோடியின் மேலும் - ஆயிரம் கோடிக்கு மேலாக; அடி
அடித்தார்
 - (தண்டாயுதத்தால்) அடிகளை அடித்துக் கொண்டார்கள்;
வானவர்  - தேவர்கள்; முடிவு ஆனவன் யார் என - (இவ்விருவரில்)
முடிவு காலம் வந்து நெருங்கியவர் யாவர் என (அறிய); மொய்த்தார் -
நெருங்கிச்  சூழ்ந்தார்கள்;  இரண்டும் தண்டு - இரண்டு தண்டுகளும்;
இடியோடு  இடி கிட்டியது  என்ன  -  இடியோடு  இடி  மோதியது
எனும்படி  (மோதி);  பொடியாயின   - துகள்களாயின;  பொருந்தினர்
புக்கார்
  -   (அவ்விருவரும்)  நெருங்கினவர்களாகி;  (மற்போரிடத்)
தொடங்கினர்.
 

                                                 (243)
 

7970.மத்தச் சின மால் களிறு என்ன மலைந்தார்;
பத்துத் திசையும் செவிடு எய்தின; பல் கால்
தத்தித் தழுவி, திரள் தோள்கொடு தள்ளி,
குத்தி, ‘தனிக் குத்து’ என, மார்பு கொடுத்தார்.
 

மத்தச்சினமால் களிறு என்ன மலைந்தார்  - (சுக்ரீவன் கும்பன்
ஆகிய இருவரும்) மதமும் சினமும் கொண்ட மயக்கமுள்ள களிறுகளைப்