|
வெவ் வழி மாயை ஒன்று, வேறு இருந்து எண்ணி வேட்கை இவ்வழி இலங்கை
வேந்தன் இயற்றியது இயம்பலுற்றாம். |
அவ்வழி - அந்தப் போர்க்களமாகிய இடத்தில்; கருணன் செய்த -
கும்பகருணன் செய்த; பேர் எழில் ஆண்மை எல்லாம் - நேர்மை
தவறாத அழகிய ஆண்மைச் செயல்களையெல்லாம்; செவ்வழி உணர்வு தோன்றச்
செப்பினம் - செம்மையாக உணர்வில் தோன்றுமாறு கூறினோம்;
இவ்வழி - இந்த இலங்கையில்; இலங்கை வேந்தன் - இலங்கை
வேந்தனாகிய இராவணன்; வேட்கை - பெருங்காமத்தால்; வெவ்வழி மாயை
ஒன்று - அறமல்லாத வழியாகிய சிறுமை நீங்காத மாயைச் செயல் ஒன்றினை;
வேறு இருந்து எண்ணி - வேறாகத் தனி இடத்தில் இருந்து நினைந்து;
இயற்றியது இயம்பலுற்றாம் - செய்ததைக் கூறத் தொடங்கினோம். |
கருணன் போரறம் தவறாது வீரப் போர் புரிய, இராவணன் அறமல்லாத மாயைச் செயலில்
ஈடுபட்டான் என்றவாறு. சிறுமை - அறமற்ற சிறுநெறி; மாயை - வஞ்சனைச் செயல். |
(1)
|
7633. |
மாதிரம் கடந்த தோளான், மந்திர இருக்கை வந்த மோதரன் என்னும் நாமத்து
ஒருவனை முறையின் நோக்கி, ‘சீதையை எய்தி, உள்ளம் சிறுமையின் தீரும்
செய்கை யாது? எனக்கு உணர்த்தி, இன்று, என் இன் உயிர் ஈதி’
என்றான். |
மாதிரம் கடந்த தோளான் - திசைகளை எல்லாம் வென்ற தோள்வலி
உடைய இராவணன்; மந்திர இருக்கை வந்த - தன் மந்திர
மண்டபத்துக்கு வந்த; மோதரன் என்னும் நாமத்து ஒருவனை -
மகோதரன் என்னும் பெயருடைய மாயையில் வல்ல ஒருவனை; முறையின்
நோக்கி - முறையாகப் பார்த்து; சீதையை எய்தி - நான் சீதையை
அடைந்து; உள்ளம் சிறுமையின் தீரும் செய்கையாது -
மனத் துன்பத்தில் இருந்து விடுபட வழியாது?; எனக்கு
உணர்த்தி - அதை எனக்குக் கூறி; இன்று - இப்போது;
என் இன் உயிர் ஈதி என்றான் - எனது இனிய உயிரைத்
தருவாய் என்றான். |