பக்கம் எண் :

200யுத்த காண்டம் 

போல்     போரிட்டார்கள்; பத்துத்  திசையும்  செவிடு  எய்தின -
(அதனால்  ஏற்பட்ட   ஓசையால்)   பத்துத்திசைகளும்  செவிடுபட்டன;
பல்கால்  தத்தித்  தழுவி  - பலமுறை  பாய்ந்து தழுவி (நெருக்கியும்);
திரள்தோள் கொடு தள்ளி - (தங்கள்) திரண்ட தோள்களைக் கொண்டு
தள்ளியும்;    குத்தி   -   (ஒருவரை   ஒருவர்)    குத்திக்கொண்டும்;
தனிக்குத்துஎன  - தனியாகக் குத்துவாய் என்று; மார்பு கொடுத்தார் -
(அடுத்தவருக்கு) மார்பினைக் காட்டியவர்களாயும்; (போர் செய்தனர்.)
 

                                                 (244)
 

7971.நிலையில் சுடரோன் மகன் வன் கை நெருங்க,
கலையில் படு கம்மியர் கூடம் அலைப்ப
உலையில் படு இரும்பு என வன்மை ஒடுங்க,
மலையின் பிளவுற்றது, தீயவன் மார்பம்,

 

நிலையில்     - (மேலே  சொன்னவாறு போர்) செய்யும் நிலையில்;
சுடரோன் மகன் - கதிரவன் மகனாகிய சுக்ரீவனது; வன் கை நெருங்க
- வலிமை உடைய கை  நெருக்கிக்குத்தியதால்; கலையில் படு கம்மியர்
-  தமக்கு  உரிய தொழிலை நன்கு  பயின்றிருக்கும்  கம்மியரது; கூடம்
அலைப்ப
 -  சம்மட்டி  மோதுவதால்;  உலையில் படு இரும்பென -
உலைக்களத்தில்  உள்ள  இரும்பு  போல; வன்மை ஒடுங்க - வலிமை
கெட;  தீயவன் மார்பம் - தீயவனாகிய  (அந்தக் கும்பனுடைய) மார்பு;
மலையின் பிளவுற்றது - மலைபிளவுபட்டதைப் போல பிளவுபட்டது.
 

நெருங்க - கையைக் குவித்து நெருங்கிக் குத்தல்
 

                                                 (245)
 

7972.‘செய்வாய் இகல்?’ என்று அவன் நின்று சிரித்தான்;
ஐ வாய் அரவம் முழை புக்கென, ஐயன்
கை வாய் வழி சென்று, அவன் ஆர் உயிர் கக்க,
பை வாய் நெடு நாவை முனிந்து பறித்தான்.
 

அவன்     - (மார்பு பிளந்த நிலையிலும்)  அந்தக் கும்பன்; இகல்
செய்வாய் என்று
- போர் செய்வாய் என்று கூறி; நின்று சிரித்தான் -
நின்று  கொண்டு சிரித்தான்; ஐயன் - தலைவனாகிய  சுக்ரீவன்; ஐவாய்
அரவம்  முழை  புக்  கென
- ஐவாய்ப் பாம்பு குகையில் புகுந்ததைப்
போல;  கை வாய் வழி சென்று - (தன்)கையை  (அவனது) வாய்க்குள்
செலுத்தி;  அவன் ஆர் உயிர் கக்க - (அவன்) (தனது) அரிய உயிரை
(வெளிக்)கக்கும்படியாக; பைவாய் நெடு