நாவை - பைபோன்ற வாயில் உள்ள நீண்ட நாக்கை; முனிந்து பறித்தான் - சினந்து பிடுங்கினான். |
ஐவாய் அரவம் - பாம்பின் சாதி (அல்) வியப்புக்குரிய பெரிய வாயை உடைய மலைப்பாம்பு எனினுமாம். |
(246) |
கும்பன் இறக்க, நிகும்பகை அங்கதன் எதிர்த்தல் |
7973. | அக்காலை, நிகும்பன், அனல் சொரி கண்ணன், புக்கான், ‘இனி, எங்கு அட போகுவது?’ என்னா, மிக்கான் எதிர், அங்கதன் உற்று வெகுண்டான்; எக்காலமும் இல்லது ஓர் பூசல் இழைத்தார். |
அக்காலை - அந்தப் பொழுது; நிகும்பன் - நிகும்பன் என்பவன்; அனல் சொரி கண்ணன் - நெருப்பை வெளிக்காலுகிற கண்களை உடையவனாய்; புக்கான் - புகுந்தான்; இனி எங்கு அட போகுவது என்னா - இனி எங்கே அட போகப் போகிறார் என்று சொல்லிக்கொண்டு (வந்து); எதிர் மிக்கான் - சுக்ரீவன் எதிரில் செருக்கி நின்றான்; உற்று அங்கதன் வெகுண்டான் - (அவன் முன்) நெருங்கி அங்கதன் சினந்து நின்றான்; எக்காலமும் இல்லது ஓர் பூசல் இழைத்தார் - (அவ்விருவரும் எக்காலத்திலும் (காண) நிகழாத (பெரும்) போரைத் (தொடங்கி) நிகழ்த்தினார்கள். |
(247) |
7974. | சூலப் படையானிடை வந்து தொடர்ந்தான், ஆலயத்தினும் வெய்யவன் அங்கதன், அங்கு ஓர் தாலப் படை கைக் கொடு சென்று தடுத்தான், நீலக் கிரிமேல் நிமிர் பொற்கிரி நேர்வான். |
நீலக் கிரி மேல் நிமிர் பொற்கிரி தேர்வான்-நீலமலையின் மேல் நிமிர்ந்து செல்லும் பொன்னால் ஆகிய மலை போல்பவனாகிய; ஆலத்திலும் வெய்யவன் அங்கதன் - நஞ்சினும் கொடுமை உடைய அங்கதன்; சூலப்படையானிடை வந்து தொடர்ந்தான்-சூலப்படையை ஏந்தியவனான (நிகும்பகை) வந்து தொடர்ந்து; ஆங்கு ஓர் - அப்பொழுது ஒரு; தாலப் படைகைக் கொடு - பனைமரம் ஆகிய படையைக் (கைக்) கொண்டு; சென்று தடுத்தான் - சென்று (அவனைத்) தடுத்தான். |