பக்கம் எண் :

202யுத்த காண்டம் 

சூலப்படையான்.  சூலப்படையை உடையவனாகிய நிகும்பன், ஆலம்
- ஆலகால நஞ்சு, தாலப்படை - பனைமரம் ஆகிய படை, நீலக்கிரி -
நீலமலை   ஈண்டு  நிகும்பன்,  பொற்கிரி  -  பொன்  மலை  ஈண்டு
அங்கதன்.
 

                                                 (248)
 

           நிகும்பன் சூலத்தைத் தடுத்து அனுமன் அவனை அழித்தல்
 

7975.எறிவான் உயர் சூலம் எடுத்தலும், ‘இன்னே
முறிவான் இகல் அங்கதன்’ என்பதன் முன்னே,
அறிவான் அடல் மாருதி அற்றம் உணர்ந்தான்,
பொறி வான் உகு தீ என வந்து புகுந்தான்.

 

எறிவான்   - (நிகும்பன்) எறிவதற்காக; உயர் சூலம் எடுத்தலும் -
சிறந்த  சூலத்தை  (உயர்த்தி)  எடுத்த  உடனே;  இகல்  அங்கதன் -
போர்த்   தொழில்வல்ல   அங்கதன்;   இன்னேமுறிவான்  என்பதன்
முன்னே
 -  இப்பொழுதே  அழிந்து  படுவான்  என்பதற்கு  முன்பே;
அடல்  மாருதி  -  கொல்லும்  தொழில்வல்ல அனுமன்; அறிவான் -
(அதனை)  அறிந்தவனாய்;  அற்றம்  உணர்ந்தான்  -  (அங்கதனின்)
முடிவை  உணர்ந்து; பொறிவான் உகு தீ என - பொறியை மிகுதியாக
வெளிப்படுத்துகிற    தீயினைப்    போல;   வந்து   புகுந்தான்   -
(அவ்விருவரிடையே) வந்து புகுந்தான்.
 

                                                 (249)
 

7976.தடை ஏதும் இல் சூலம் முனிந்து, சலத்தால்,
விடையே நிகர் அங்கதன்மேல் விடுவானை,
இடையே தடைகொண்டு, தன் ஏடு அவிழ் அம் கைப்
புடையே கொடு கொன்று, அடல் மாருதி போனான்.

 

தடை ஏதும் இல் சூலம் - (உயிரைப் போக்குவதில்) தடை எதுவும்
இல்லாத  சூலத்தை; முனிந்து - சினந்து; சலத்தால் - வஞ்சனையோடு;
விடையே  நிகர்  அங்கதன்  மேல் விடுவானை - காளையை ஒத்த
அங்கதன்   மீது  செலுத்துபவனாகிய  நிகும்பனை;  இடையே  தடை
கொண்டு
- இடையே (சென்று) தடுத்துக் கொண்டு; தன் - தன்னுடைய;
ஏடு  அவிழ் அம் கைப் - இதழ் விரிந்தது போல் அமைந்த அழகிய
கைகளால்;  புடையே கொடு கொன்று - புடைத்துக் கொன்று; அடல்
மாருதி போனான்
- கொல்லும் தொழில் வல்ல மாருதி சென்றான்.
 

                                                 (250)