தலைவர்களை இழந்த அரக்கர் சேனையின் நிலை |
7977.
| நின்றார்கள் தடுப்பவர் இன்மை நெளிந்தார், பின்றாதவர் பின்றி இரிந்து பிரிந்தார்; வன் தாள் மரம் வீசிய வானர வீரர் கொன்றார்; மிகு தானை அரக்கர் குறைந்தார். |
நின்றார்கள் - (இதுவரை) பின்னிடாது நின்ற (அரக்க வீரர்கள்); தடுப்பவர் இன்மை நெளிந்தார் - (குரங்குப்படைகளைத்) தடுத்திடும் (தலைவர்கள்) இல்லாமையால் தத்தளித்து; பின்றாதவர் பின்றி - புறங்கொடாதவர் புறங்கொடுத்து; இரிந்து பிரிந்தார் - நிலைகெட்டுப் பிரிந்தார்கள்; வன்தாள் மரம் வீசிய - வலிய அடிப்பகுதியைக் கொண்ட மரங்களை வீசிய; வானர வீரர் - குரக்கு வீரர்கள்; மிகுதானை கொன்றார் - (அரக்கரின்) பெரும் படையைக் கொன்றார்கள்; அரக்கர் குறைந்தார் - அதனால் அரக்க வீரர் எண்ணிக்கையில் குறைந்தார்கள். |
நெளிதல் - தத்தளித்தல், பின்னாதவர் - பின்னிடாதவர், இரிதல் - நிலைகெட்டு ஓடல். |
(251) |
7978. | ஓடிப் புகு வாயில் நெருக்கின் உலந்தார், கோடிக்கு அதிகத்தினும் மேல் உளர்; குத்தால் பீடிப்புறு புண் உடலோடு பெயர்ந்தார், பாடித்தலை உற்றவர், எண் இலர் பட்டார், |
புகுவாயில் ஓடி - நகரத்துக்குள் ஓடி; புகுவாயில் - புகுகின்ற வாயிலின்கண்; நெருக்கின் உலந்தார் - (ஏற்பட்ட) நெருக்கத்தால் உயிரிழந்தவர்; கோடிக்கு அதிகத்தினும் மேல் உளர்-கோடிக்கு மேல் அதிகமாக உள்ளனர்; குத்தால் - (வானர வீரர் குத்திய) குத்தினால்; பீடிப்புறு புண் உடலோடு பெயர்ந்தார் -உண்டாகிய புண் உடலோடு திரும்பிப் போய்; பாடித்தலை உற்றவர் - பாசறைக் கண் சேர்ந்தவர்கள்; எண் இலர் பட்டார் - எண்ணில்லாதவர்கள் இறந்துபட்டார்கள். |
(252) |
7979. | ‘தண்ணீர் தருக’ என்றனர் தாவுற ஓடி, உண் நீர் அற, ஆவி உலந்தனர், உக்கார்; கண்ணீரொடும் ஆவி கலுழ்ந்தனர்; காலால் மண் ஈரம் உற, கடிது ஊர் புக வந்தார். |