பக்கம் எண் :

204யுத்த காண்டம் 

தண்ணீர்  தருக என்றனர் - தண்ணீர் தருக என்று கேட்டவர்கள்;
தாவுற ஓடி - தண்ணீர் உள்ள இடத்தை நோக்கி ஓடி, உண் நீர் அற -
நாக்கில்  இருந்த நீர் முற்றும் வரண்டு விட; ஆவி உலந்தனர் உக்கார்
-  உயிர் வாடியவர்களாய்  அழிந்தார்கள்; கண்ணீரொடும் - கண்ணீர்ப்
பெருக்கோடு; ஆவி கலுழ்ந்தனர் - உயிருக்காக அழுதவர்கள்; காலால்
மண்  ஈரம்  உற
 - காலின்வழிப்  பெருகும் கண்ணீரினால் மண்ணில்
ஈரம்  மிக;  கடிது  ஊர்புக  வந்தார்  -  விரைவாக  ஊரின்கண் புக
வந்தார்கள்.
 

தாவு   -   தண்ணீர்  கிடைக்கும்  பள்ளம்.  தண்ணீர்த்தாவு  என்ற
கொங்குப் பேச்சு வழக்கை எண்ணுக,
 

                                                 (253)
 

7980.விண்மேல் நெடிது ஓடினர், ஆர் உயிர் விட்டார்
மண்மேல் நெடு மால் வரை என்ன மறிந்தார்;
எண் மேலும் நிமிர்ந்துளர், ஈருள் தயங்கப்
புண் மேலுடை மேனியினார், திசை போனார்.

 

விண்மேல்    நெடிது ஓடினர் - ஆகாயத்தின் மேல் நீண்ட தூரம்
ஓடியவர்களாகி;  ஆர்  உயிர்  விட்டார்  -  தங்களது அரிய உயிரை
விட்டவர்களும்;  மண்  மேல்  -  நிலத்தின்  மேல்;  நெடுமால் வரை
என்ன   மறிந்தார்
 -  உயர்ந்த  பெரிய  மலைகள்  (விழுந்துள்ளன)
என்னும்படி  இறந்து கிடந்தவர்களும்; ஈருள் தயங்க - ஈரல்  வெளியே
தெரிய;   புண்   மேலுடை   மேனியினார் -  புண்கள்  மிக்குடைய
உடம்பினை  உடையவராய்; திசை போனார் - திசைகளின் கண் ஓடிச்
சென்றவர்களும்;   எண்  மேலும்  நிமிர்ந்துளர்  -  எண்ணிக்கைக்கு
அடங்காமல் மிகுந்துள்ளனர்.
 

நெடிது-நீண்ட  தூரம்,  எண்   - எண்ணிக்கை, ஈருள் தயங்குதல் -
ஈரல் வெளியே தெரிதல், ஈருள் - ஈரல்,
 

                                                (254)
 

7981.அறியும்மவர்தங்களை, ‘ஐய! இவ் அம்பைப்
பறியும்’ என வந்து, பறித்தலும் ஆவி
பிறியும் அவர் எண் இலர்; தம் மனை பெற்றார்,
குறியும் அறிகின்றிலர், சிந்தை குறைந்தார்.

 

அறியும்   மவர் தங்களை - (தங்களுக்கு) அறிமுகமாகி இருப்பவர்
தங்களை  நோக்கி; ஐய - ஐயனே; இவ்அம்பைப் பறியும் என - இந்த
அம்பை  (உடலை  விட்டுப்) பறித்து விடுங்கள் என்று சொல்ல; வந்து
பறித்தலும்
- (அவர்கள்) வந்து பறித்த உடனே;