ஆவி பிறியும் அவர் எண் இலர் - உயிர் பிரிந்த அவர்கள் எண்ணிக்கை இல்லாதவர் ஆவர்; தம்மனை பெற்றார் - தங்கள் வீட்டைச் சென்று அடைந்தவர்கள்; குறியும் அறிகின்றிலர் - (அதன்) அடையாளத்தையும் அறியாதவர்களாய்; சிந்தை குறைந்தார் - மனம் ஒடுங்கியவர்களும் (எண்ணிலர்) என்றபடி |
எண்ணிலர் என்பதை மத்திம தீபமாகக் கொண்டு, பிறியும் அவர் எண்ணிலர், சிந்தை குறைந்தார் எண்ணிலர் எனக் கூட்டுக. குறியும் அறியாமைக்குக் காரணம் அம்புகள் உடம்பில் பட்டதால் ஏற்பட்ட தளர்ச்சி. |
(255) |
7982. | பரி பட்டு விழ, சிலர் நின்று பதைத்தார்; கரி பட்டு உருள, சிலர் கால்கொடு சென்றார்; நெரி பட்டு அழி தேரிடையே பலர் நின்றார், எரி பட்ட மலைக்கண் இருந்தவர் என்ன, |
பரிபட்டு விழ - குதிரைகள் இறந்து விழுந்ததால்; சிலர் நின்று பதைத்தார் - சிலர் (தடுமாறி) நின்று பதைப்பு எய்தினார்கள்; கரிபட்டு உருள - யானைகள் இறந்து விழுந்து உருண்டதனால்; சிலர் கால் கொடு சென்றார் - சிலர் காலினைக் கொண்டு ஓடிச் சென்றார்கள்; எரிபட்ட மலைக்கண் இருந்தவர் என்ன - நெருப்பில் எரிந்த மலையிடத்து இருந்தவர்கள் என்னும்படியாக; நெரிபட்டு அழி தேரிடையே - நெருக்கத்தினால் அழிந்து போன தேர்களின் இடையே; பலர்நின்றார் - பல (அரக்கர்) நின்றார்கள். |
(256) |
7983. | மண்ணின் தலை வானர மேனியர் வந்தார், புண் நின்ற உடற் பொறையோர் சிலர் புக்கார், ‘கண் நின்ற குரங்கு கலந்தன’ என்னா, உள் நின்ற அரக்கர் மலைக்க, உலந்தார். |
மண்ணின் தலை-நிலத்திடத்தில்; புண் நின்ற உடற் பொறையோர் - புண்பட்ட உடல் பாரம் உடையவர்களாகச் சிலர்; வானர மேனியர் - சிலர் குரங்கு மேனி உடையவர்களாக; வந்தார் புக்கார் - வந்து புகுந்தார்கள்; கண் நின்ற குரங்கு - தங்கள் கண் எதிரே நின்ற குரங்கு(ப் படைவீரர்) கலந்தன என்னா - தங்கள் படையோடு கலந்தன என்று எண்ணி; உள் நின்ற அரக்கர் - (அரக்கர் படையின்) உள்ளே இருந்த அரக்கர்கள்; மலைக்க - |