பக்கம் எண் :

206யுத்த காண்டம் 

(அவர்களோடு)   போர்   செய்ய;   உலந்தார்   -  (அவ்வரக்கர்கள்)
அழிந்தார்கள்.
 

                                                 (257)
 

அறுசீர் ஆசிரிய விருத்தம்
 

7984.இரு கணும் திறந்து நோக்கி, அயல் இருந்து இரங்குகின்ற
உருகு தம் காதலோரை, ‘உண்ணும் நீர் உதவும்’ என்றார்,
வருவதன் முன்னம் மாண்டார் சிலர்; சிலர் வந்த தண்ணீர்
பருகுவார் இடையே பட்டார்; சிலர் சிலர் பருகிப் பட்டார்.

 

இருகணும்     திறந்து நோக்கி - தங்களது இரண்டு கண்களையும்
திறந்து  பார்த்து;  அயல்  இருந்து  இரங்குகின்ற - அருகில் இருந்து
(தங்களது  நிலைக்கு) இரங்கி; உருகு தம் காதலோரை - மனமுருகுகிற
(தங்களின்) அன்புக்கு இடமானவரைக் (கண்டு);  உண்ணும் நீர் உதவும்
என்றார்
 -  (நீங்கள்  எங்கட்கு)   உண்பதற்கு  உரிய  நீரைத்  தந்து
உதவுங்கள் என்று கேட்டார்கள்; சிலர் வருவதன் முன்னம் மாண்டார்
-  (அவ்வாறு  கேட்டவர்களில்) சிலர் (தண்ணீர்)  கொண்டு வருவதற்கு
முன்பே  இறந்தார்கள்.   சிலர்  வந்த தண்ணீர் பருகுவார் இடையே
பட்டார்
 -  சிலர் (கொண்டு) வந்த தண்ணீரை உண்டு நடுவில் இறந்து
அழிந்தார்கள்;  சிலர்  சிலர்  -  மிகச்  சிலரே  தண்ணீரைப்  பருகி
இறந்தார்கள்.
 

                                                 (258)
 

7985.மக்களைச் சுமந்து செல்லும் தாதையர், வழியின் ஆவி
உக்கனர் என்ன வீசி, தம்மைக் கொண்டு ஓடிப் போனார்;
கக்கினர் குருதி வாயால், கண்மணி சிதற, காலால்
திக்கொடு நெறியும் காணார், திரிந்து சென்று, உயிரும்
                                       தீர்ந்தார்.

 

மக்களைச்  சுமந்து செல்லும் தாதையர் - (போரில் புண் பட்டு
விழுந்த  தம்)  மக்களைச்  சுமந்து செல்லுகின்ற தந்தையர்; வழியின்
ஆவி உக்கனர் என்ன வீசி
- (அம்மக்கள்) வழியில் உயிர்