பக்கம் எண் :

208யுத்த காண்டம் 

7987.நோக்கிய இலங்கை வேந்தன், ‘உற்றது நுவல்மின்’ என்றான்;
‘போக்கிய சேனைதன்னில் புகுந்துள இறையும் போதா;
ஆக்கிய போரின், ஐய! அதிகாயன் முதல்வர் ஆய
கோக் குலக் குமரர் எல்லாம் கொடுத்தனர், ஆவி’ என்றார்.

 

நோக்கிய     இலங்கை வேந்தன் - (தூதர் காலில் விழுந்ததைப்)
பார்த்த  இலங்கைக்கு  வேந்தனாகிய  இராவணன்; உற்றது நுவல் மின்
என்றார்
 -  (நீர்)  நடந்ததைச்   சொல்லுங்கள்  என்றான்;  போக்கிய
சேனை தன்னில்
- (நீ) அனுப்பிய  படைதன்னில்; புகுந்துள - திரும்பி
நகருக்கு    வந்துள்ளவை;   இறையும்   போதா   -   சிறிது  என்று
சொல்லுவதற்குக்  கூடப் போதாது; ஐய - ஐயனே; ஆக்கிய போரின் -
நடந்த   போரில்;   அதிகாயன்  முதல்வர்  ஆய  -  அதிகாயனைத்
தலைவனாகக்  கொண்ட;  கோக்குலக்குமரர் எல்லாம் - அரசகுலத்துக்
குமரர்கள்   எல்லாம்;  ஆவி  கொடுத்தனர்  என்றார்  -  உயிரைக்
கொடுத்துவிட்டனர் என்று கூறினார்கள்.
 

                                                  (261)
 

                                  இராவணன் நிலையும் செயலும்
 

7988.ஏங்கிய விம்மல் மானம், இரங்கிய இரக்கம் வீரம்,
ஓங்கிய வெகுளி துன்பம் என்று இவை ஒன்றற்கு ஒன்று
தாங்கிய தரங்கம் ஆகக் கரையினைத் தள்ளித் தள்ளி,
வாங்கிய கடல்போல் நின்றான்-அருவி நீர் வழங்கு
                                    கண்ணான்.

 

அருவி நீர் வழங்கும் கண்ணான் - (கோக்குலக்குமரர் இறந்ததைக்
கேள்விப்பட்டதால்)   நீரருவி   போன்று   கண்ணீர்  வெளிப்படுகின்ற
கண்களை  உடையவனாகிய  இராவணன்;  ஏங்கிய  விம்மல் - ஏக்கம்
கொள்ளக் காரணமாகிய;  மானம்   இரங்கிய  இரக்கம்  -  மானமும்
இரங்குகின்ற  இரக்கமும்;  ஓங்கிய வெகுளி  துன்பம் என்று இவை -
மிக்க சினமும், துன்பமும் என்ற  இவை,; ஒன்றற்கு ஒன்று - ஒன்றோடு
ஒன்று;  தாங்கிய  தரங்கம்  ஆக - மேலும் மேலும் தள்ளி வருகின்ற
அலைபோல இருக்க;