கரையினைத் தள்ளித் தள்ளி - (அவ்வலை) கரையளவு (வந்து) தள்ளித் தள்ளி; வாங்கிய - பின்னால் செல்லுகின்ற; கடல் போல் நின்றான் - கடல் போல் நின்றான். |
(262) |
7989. | திசையினை நோக்கும்; நின்ற தேவரை நோக்கும்; வந்த வசையினை நோக்கும்; கொற்ற வாளினை நோக்கும்; பற்றிப் பிசையுறும் கையை; மீசை கறுக்கொள உயிர்க்கும்; பேதை நசையிடைக் கண்டான் என்ன, நகும், அழும், முனியும், நாணும். |
திசையினை நோக்கும் - (அதற்குப் பின்னால் இராவணன்) திசைகளை எல்லாம் நோக்குவான்; நின்ற தேவரை நோக்கும் - (தனக்குப் பணிவிடை செய்து நின்ற) தேவர்களை நோக்குவான்; வந்த வசையினை நோக்கும் - (தனக்கு) ஏற்பட்ட பழியினை நோக்குவான்; கொற்ற வாளினை நோக்கும் - வெற்றி பொருந்திய வாளினை நோக்குவான்; கையைப் பற்றிப் பிசையுறும் - கையைப் பற்றிப் பிசைவான்; மீசை சுறுக்கொள உயிர்க்கும் - மீசை தீய்ந்து போகும்படி பெருமூச்சு விடுவான்; நசையிடைப் பேதை கண்டான் என்ன - விருப்பம் மிகுதியால் பேதமைக் குணங்களை அடைந்தவன் போல; நகும் அழும் முனியும் நாணும் - நகுவான், அழுவான், முனிவான், நாணுவான். |
(263) |
7990. | மண்ணினை எடுக்க எண்ணும்; வானினை இடிக்க எண்ணும்; எண்ணிய உயிர்கள் எல்லாம் ஒரு கணத்து எற்ற எண்ணும்; ‘பெண் எனும் பெயர எல்லாம் பிளப்பென்’ என்று எண்ணும்; எண்ணி, புண்ணிடை எரி புக்கென்ன, மானத்தால் புழுங்கி நையும். |
மண்ணினை எடுக்க எண்ணும் - (மேலும் இராவணன்) நிலவுலகை எடுக்க எண்ணுவான்; வானினை இடிக்க எண்ணும் - |