| 7992. | மலைக்   குவட்டு   இடி  வீழ்ந்தென்ன,  வளைகளோடு                                    ஆரம் ஏங்க, முலைக் குவட்டு எற்றும் கையாள்; முழை திறந்தன்ன                                          வாயாள்; தலைக் குவட்டு அணைந்த செக்கர் சரிந்தன குழல்கள் தத்தி, உலைக்கு வட்டு உருகு செம்பு ஒத்து உதிர நீர் ஒழுகும்                                         கண்ணாள்;   |  மலைக்    குவட்டு  இடி வீழ்ந்தென்ன -  (ஏங்கி  அரற்றி  வந்த தானியமாலி)  மலை  உச்சியில்  இடி விழுந்தது போல; வளைகளோடு ஆரம்  ஏங்க  -  (கையில் அணிந்துள்ள)  வளையல்களும் (கழுத்தில் அணிந்துள்ள) ஆரமும்  ஒலிக்க; முலைக் குவட்டு எற்றும் கையால் - முலையாகிய  மலைமீது  மோதுகிற  கையை   உடையவளாய்;  முழை திறந்தன்ன வாயாள் - குகை திறந்தது போன்ற வாயை உடையவளாய்; தலைக்குவட்டு  அணைந்த  செக்கர் சரிந்தன  -  மேற்கு மலையில் பொருந்திய  செவ்வானம் (கீழே) சரிந்தது போன்ற; குழல்கள் தத்தி - சிவந்த  நிறமுடைய  கூந்தல்  அவிழ்ந்து  பரவ; உலைக்கு - உலைக் களத்தின்  கண்;  வட்டு செம்பு உருகு ஒத்து - திரண்ட பொருளாகிய செம்பு  உருகுவதை ஒத்து; உதிர நீர் ஒழுகும் கண்ணாள் - குருதி நீர் ஒழுகுகிற கண்களை உடையவள் ஆனாள்.    |  குவடு     - உச்சி, ஆரம் - கழுத்தாரம், முழை - குகை, செக்கர் - செவ்வானம்,  தத்தி  -  பரந்து,  உலைக்கு  - உலைக்களத்தின் கண், வட்டு  -  திரண்ட  பொருள்,  முலைக்குவடு  உருவகம்,  உதிரநீர்  - உருவகம்.    |                                                   (266)    |  | 7993. | வீழ்ந்தனள்  அரக்கன்   தாள்மேல்,  மென்மைத்  தோள்                                  நிலத்தை மேவ; போழ்ந்தனள்,   பெரும்பாம்பு   என்னப்   புரண்டனள்;                                 பொருமிப் பொங்கி, ‘சூழ்ந்தனை,    கொடியாய்!’    என்னா,  துடித்து, அருந்                                  துயர வெள்ளத்து ஆழ்ந்தனள், புலம்பலுற்றாள், அழக் கண்டும்                                    அறிந்திலாதாள்; |  
  |   
				
				 | 
				 
			 
			 |