பக்கம் எண் :

214யுத்த காண்டம் 

மக்கள்     துணையும் வீர உறவினர் துணையும் இழந்த நீ இனி
ஒருமுறை  திக்கு  விசயம்  செய்வது  எவ்வாறு  எனத்  தானியமாலி
வினவினள்  என்க.  "மக்கள்  துணை அற்றனை (கம்ப. 8009) என்று
இந்திரசித்தன்  இராவணனை நோக்கிக் கூறுதலும் காண்க. உலத்தல் -
அழிதல்,  திறம் - ஈண்டுவலிமை, வீடுதல் - அழிதல், திக்கு விசயம் -
திசைதொறும்  சென்று  எதிர்த்தாரை வெல்லுதல், திக்கு விசயம் இனி
ஒருகால்  செய்யாயோ - நீயாவது திக்குவிசயம் செய்ய வரமாட்டாயோ
என்று   தன்   மகனைக்  கொன்றவரைப்  பழிவாங்கத்  தானியமாலி
கூறுகிறாள் என்றும் கொள்ளலாம்.
 

                                                 (270)
 

7997.‘ஏது ஐயா சிந்தித்து இருக்கின்றாய்’ எண் இறந்த
கோதை ஆர் வேல் அரக்கர் பட்டாரைக் கூவாயோ?
பேதை ஆய்க் காமம் பிடிப்பாய் பிழைப்பாயோ?
சீதையால் இன்னம் வருவ சிலவேயோ?

 

ஐயா    ஏது சிந்தித்து இருக்கின்றாய் - (இராவணன் மௌனியாய்
இருத்தல்  கண்டு)  ஐயா  எதைச் சிந்தித்துக் கொண்டு இருக்கின்றாய்;
எண்  இறந்த -  எண்ணிக்கை கடந்த; கோதை ஆர் வேல் - மாலை
பொருந்திய  வேலை ஏந்திய;  அரக்கர்  பட்டாரைக்  கூவாயோ  -
அரக்கர்களாகிய      இறந்தவர்களை     (உயிருடன்    திரும்பிவரக்)
கூப்பிடமாட்டாயோ?;   பேதைஆய்   -  அறிவற்றுப்போய்க்;  காமம்
பிடிப்பாய்  பிழைப்பாயோ
 -  காமத்தைக்  கைக்கொண்ட  (நீ) உயிர்
பிழைப்பாயோ?;  இன்னும்  -இன்னமும்;  சீதையால்வருவ  -  சீதை
காரணமாக வருந்துன்பங்கள்; சிலவேயோ - சிலதானோ (அன்று பல).
 

                                                 (271)
 

7998.

‘உம்பி, உணர்வுடையான், சொன்ன உரை கேளாய்;
நம்பி குலக் கிழவன் கூறும் நலம் ஓராய்;
கும்பகருணனையும் கொல்வித்து, என் கோமகனை
அம்புக்கு இரை ஆக்கி, ஆண்டாய் அரசு, ஐய!’
 

உணர்வுடையான்     உம்பி - அறிவு உடையவனாகிய உன் தம்பி
(வீடணன்);   சொன்ன   உரை   கேளாய்   -  கூறிய  சொற்களைக்
கேளாதவனாயும்;  நம்பி  குலக்கிழவன்  கூறும்  -  ஆடவரிற் சிறந்த
குலத்தலைவனாகிய  மாலியவான் கூறிய;  நலம் ஓராய் - (சொற்களின்)
நன்மையை  எண்ணாதவனாயும்;  கும்பகருணனையும்  கொல்வித்து -
(இருந்து)  கும்பகருணனைப்  (பகைவர்   கையால்)   கொல்வித்து; என்
கோமகனை
- என் சிறந்த மகனாகிய