பக்கம் எண் :

 அதிகாயன் வதைப் படலம் 215

அதிகாயனை;     அம்புக்கு இரை ஆக்கி - (பகைவர்) அம்புக்கு
இரையாகக்  கொடுத்து;  ஐய  -  ஐயனே;  அரசு ஆண்டாய் - அரசு
புரிந்தாய்.
 

நல்லுரை     கேளாது    பகைவரிடம்    கும்பகருணனையும்,
அதிகாயனையும்  பலி  கொடுத்து  அரசாள்வாய் என்றபடி. ஐய அரசு
ஆண்டாய்  -  இகழ்ச்சி குறித்து அன்னிய உணர்வு தோன்ற வந்தது.
உணர்வு  -  ஈண்டு  அறிவு.  உம்பி - ஈண்டு வீடணனைக் குறித்தது.
குலக்கிழவன் - குலத்தலைவனாகிய மாலியவான்.
 

                                                 (272)
 

                                தானியமாலி அரண்மனை சேறல்
 

7999.என்று, பலப்பலவும் பன்னி எடுத்து அழைத்து,
கன்று படப் பதைத்த தாய்போல் கவல்வாளை,
நின்ற உருப்பசியும் மேனகையும் நேர்ந்து எடுத்து,
குன்று புரையும் நெடுங் கோயில் கொண்டு அணைந்தார்.

 

என்று  - என்று; பலப்பலவும் - பலவற்றையும்; பன்னி - பலமுறை;
எடுத்து  அழைத்து -  எடுத்துக்கூறி;  கன்று  படப்பதைத்த - கன்று
உயிர்  இழந்ததால்  பதைப்பு   எய்திய; தாய்போல் - தாய்ப் பசுவைப்
போல்;  கவல்வாளை  -  கலங்கி  அழுகின்றவளாகிய தானியமாலியை;
நின்ற   உருப்பசியும்   -   (அங்கு  அருகில்)  நின்ற  உருப்பசியும்;
மேனகையும்  -  மேனகையும்;  நேர்ந்து  எடுத்து  - நெருங்கி வந்து
எடுத்து;  குன்று புரையும் - குன்றினை ஒத்த; நெடுங்கோயில் - பெரிய
அரண்மனைக்குக்; கொண்டு அணைந்தார் - கொண்டு சேர்த்தார்கள்.
 

                                                (273)
 

                                         இலங்கையர் வருத்தம்
 

8000.தானை நகரத்துத் தளரத் தலைமயங்கி,
போன மகவுடையார் எல்லாம் புலம்பினார்;-
ஏனை மகளிர் நிலை என்ன ஆகும்?-போய் இரங்கி,
வான மகளிரும் தம் வாய் திறந்து மாழ்கினார்.

 

நகரத்துத்தானை    தளர  -  இலங்கை  நகரத்தின்கண்  (தங்கள்)
சேனைகளின்   தோல்வியைக்   (கேள்விப்பட்டு);   தலைமயங்கி   -
அரக்கர்கள்  எல்லாரும் ஒன்று கூடி; போன மகவுடையார் - (போரில்
இறந்து) போன மக்கள் உடையவர்கள்; எல்லாம் புலம்பினார் -