பக்கம் எண் :

 நாகபாசப் படலம் 217

18. நாகபாசப் படலம்
 

நாகபாசத்தின்    செயல் பற்றிக் கூறும் படலம் நாக பாசப் படலம்
எனப்பட்டது.  நாக  அத்திரமாகிய  பாசம்  என  விரிக்க. கயிற்றைப்
போல்  கட்டிக்  கட்டுப்படுத்துதலின்  நாகபாசம் எனப்பட்டது. இந்திர
சித்தன்  நாகபாசத்தை  இலக்குவன்  முதலியோர்  மீது எய்த செய்தி
இப்படலத்தில் கூறப்படுகிறது.
 

அரக்கமாதரின்    அழுகை ஒலி கேட்ட இந்திரசித்து, காரணத்தை
அறிய  இராவணன்  இருக்கும்  இடம் சென்றான். நடந்ததை அறிந்து,
போருக்கு   இராவணனிடம்   விடை   பெற்றுச்   சென்றான்.   தன்
தம்பியாகிய   அதிகாயனைக்  கொன்ற  இலக்குவனைக்  கொல்வேன்
என்று   வஞ்சினம்  கூறிப்  பல்வகைப்  படையுடன்  போர்க்கோலம்
பூண்டு போர்க்களம் சேர்ந்தான்.
 

இலக்குவனுக்கு   வீடணன்    இந்திரசித்தனின்    வலிமையைக்
கூறித்துணையுடன் சென்று போர் செய்தலே நலம் என்று கூறக் கேட்டு,
இலக்குவன்  சுக்ரீவன்  முதலியோருடன்  கூடி அவன் மீது போருக்கு
எழுந்தான்.
 

இலக்குவனுடன்     போரிட இந்திர சித்தன்   வருவதைக் கண்ட
அனுமன்,  தான்  போரிடும்  இடத்தை  விட்டு  அங்குச்  சென்றான்.
சுக்ரீவன்  அங்கதன்  முதலியோரும்  பெரும் படையுடன் சென்றனர்.
இருதிறப்  படைக்கும்  போர்  தொடங்கியது. அரக்கர் படை குரக்குப்
படை  வலிமைக்குத்  தளர்வது  கண்ட  இந்திரசித்தன்  தானே தனி
ஒருவனாய்ப்   பொருது   வென்று  நின்றான்.  சுக்ரீவன்,  அனுமன்,
அங்கதன்,  நீலன்  ஆகியோர்  ஆக்கிய  போர்  எலாம்  ஆக்கியும்
குரங்குப் படையின் அழிவைத் தடுக்க முடியவில்லை.
 

அதைக்    கண்ட இலக்குவன் தானே முதலில் சென்று போரிடாது
குரங்குப்  படையைப் போரிட அனுப்பியதற்காக வருந்தினான், உடன்
அவன்,  போர்க்களம் வந்தான். இலக்குவன் இந்திரசித்தனை நெருங்கி
அனுமன்  தோளின்மீது  ஏறிப்  போர்  தொடங்கினான்.  இலக்குவன்
இந்திரசித்தனின்  கவசத்தைப்  பிளந்து அவனை  மூர்ச்சை அடையச்
செய்தான். தொடர்ந்து நடந்த போரில் இந்திரசித்தன் இலக்குவன் மீது
நாக  பாசத்தை  எய்தான். இலக்குவன் முதலியோர் அதனால் கட்டுப்
பட்டு  விழுந்தனர்.  அதுகண்ட  வீடணன்  அனலனால் தேற்றப்பட்டு
இராமனைச்  சந்தித்து  நடந்ததைக்  கூறினான்,  இராமன் தீக்கடவுள்
அம்பினால்  ஒளியை  உண்டாக்கிக்  கொண்டு இலக்குவனைத் தேடிச்
சென்று கண்டு பலவாறு வருந்தினான். இராமனிடம் வீடணன்