பக்கம் எண் :

220யுத்த காண்டம் 

ஓட்டா நெடுந் தேர் கடிது ஓட்டி, இமைப்பின் உற்றான்
காட்டாதன காட்டிய தாதையைச் சென்று கண்டான்.

 

இடை   உற்றது  என்  என்று  கேட்டான்  -  (இந்திரசித்தன்)
இவ்விடத்தில்    (துன்பத்துக்குரியதாக)   நடந்தது     என்ன   என்று
கேட்டான்; யாரும் கிளத்தில் மாட்டாது நடுங்கினர் - அதற்கு யாரும்
விடை   சொல்ல   மாட்டாமல்  நடுங்கியவர்களாய்;  மாற்றம்  மறந்து
நின்றார் 
  -   (எதை)  விடையாகச்   சொல்லுவது  என்பதை  மறந்து
நின்றார்கள்;  ஓட்டா  நெடுந்தேர் கடிது ஓட்டி - (காரணத்தை அறிய
விரும்பிய   இந்திரசித்தன்)    ஓட்டாமலேயே    (விரைந்து   செல்லும்
சிங்கங்கள்   பூட்டிய)   பெரிய    தேரினை    விரைவாகச்  செலுத்தி;
இமைப்பின்  உற்றான்  -  கண்ணிமை   அளவு  நேரத்தில்  போய்ச்
சேர்ந்து;  காட்டாதன  காட்டிய  தாதையை   -  (செயற்கு)  அரிய
செயல்களை   எல்லாம்   செய்து   காட்டிய   (தன்)   தந்தையாகிய
இராவணனைச்; சென்று கண்டான் - சென்று பார்த்தான்.
 

காட்டாதன   காட்டிய தாதை - இராவணன் பிறரால் செய்ய இயலாத
கைலாய  மலையை  எடுத்தல், தன் தலையைத் தானே கொய்து யாழ்
வாசித்தல்,   திக்கு   யானைகளோடு   போரிடல்   போன்ற  அருஞ்
செயல்களைச் செய்தவன் என்பது குறிக்க. இதுவரை காட்டாதனவாகிய
அவல  உணர்வை அதிகாயன் இறந்ததால் முகத்தில் காட்டி வருந்தும்
தாதையை என்று உரைப்பினும் அமையும்.
 

                                                   (3)
 

8005.கண்டான், இறை ஆறிய நெஞ்சினன், கைகள் கூப்பி,
‘உண்டாயது என், இவ்வுழி?’ என்றலும், ‘உம்பிமாரைக்
கொண்டான் உயிர் காலனும்; கும்ப நிகும்பரோடும்
விண்தான் அடைந்தான், அதிகாயனும்-வீர!’ என்றான்.

 

கண்டான் - (இந்திரசித்தன் இராவணனைப்) பார்த்து; இறை ஆறிய
நெஞ்சினன்
  -  சிறிதளவு  (துன்பம்)  தணிந்த  மனமுடையவனாய்;
கைகள்   கூப்பி  - அவனைக்  கைகூப்பித்  தொழுது;  இவ்வுழி -
இவ்விடத்து; உண்டாயது என் என்றலும் - உண்டாகிய (துயரத்துக்குக்
காரணம்)    என்ன   என்று   கேட்டலும்;   வீர    -   (இராவணன்
இந்திரசித்தனைப் பார்த்து) வீரனே; உம்பிமாரை -