உன் தம்பியரைக்; காலனும் உயிர் கொண்டான் - காலன் உயிர் கொண்டான்; கும்ப நிகும்பரோடும் - கும்பன் நிகும்பன் என்ற இருவருடன்; அதிகாயனும் - அதிகாயனும்; விண்தான் அடைந்தான் - வானுலகத்தை அடைந்தான்; என்றான் - என்று கூறினான். |
இறை ஆறிய நெஞ்சினன் - இராவணனுக்குத் துன்பம் எதுவும் ஏற்படவில்லை என்று கண்டதால் ஏற்பட்ட ஆறிய மனநிலை. உம்பிமார் - தேவாந்தகன், நராந்தகன், திரிசிரன் என்போர். |
(4) |
8006. | சொல்லாத முன்னம், சுடரைச் சுடர் தூண்டு கண்ணான், பல்லால் அதரத்தை அதுக்கி, விண்மீது பார்த்தான்; ‘எல்லாரும் இறந்தனரோ!’ என ஏங்கி நைந்தான்;- வில்லாளரை எண்ணின், விரற்கு முன் நிற்கும் வீரன். |
வில்லாளரை எண்ணின் - வில் வீரர்களை எண்ணினால்; முன் விரற்கு நிற்கும் வீரன் - முன் விரலில் நிற்கும் வீரனாகிய இந்திரசித்தன்; சொல்லாத முன்னம் - (தம்பியரின் இறப்பை இராவணன்) சொல்லுவதற்கு முன்னமேயே; சுடரைக் சுடர் தூண்டு கண்ணான் - தீயைக் கூட எரிக்கும் தன்மை வாய்ந்த கண்களை உடையவனாகி; பல்லால் அதரத்தை அதுக்கி - பற்களால் உதட்டைக் கடித்து; விண்மீது பார்த்தான் - வானத்தின் மேல் (அண்ணாந்து) பார்த்தான்; எல்லாரும் இறந்தனரோ - எல்லோரும் இறந்து விட்டார்களோ? என - என்று; ஏங்கி நைந்தான் - இரக்கம் கொண்டு வருந்தினான். |
வில்லாளரை எண்ணின் விரற்கு முன் நிற்கும் வீரன் - வில்லாளரில் முதல்வன் என்றபடி, விண்மீது பார்த்தான் - தன்னால் வெல்லப்பட்ட இந்திரனும் பிற தேவரும் சிரிப்பரே என்பதற்காக விண் பார்த்தான் என்க. |
(5) |
8007. | ‘ஆர் கொன்றவர்?’ என்றலுமே, ‘அதிகாயன் என்னும் பேர் கொன்றவன் வென்றி இலக்குவன்; பின்பு நின்றார் ஊர் கொன்றவனால், பிறரால்’ என, உற்ற எல்லாம் தார் கொன்றையினான் கிரி சாய்த்தவன்தான் உரைத்தான். |