பக்கம் எண் :

222யுத்த காண்டம் 

கொன்றவர்   ஆர் என்றலும் - (ஏங்கி வருந்திய இந்திர சித்தன்
இராவணனைப்  பார்த்துக்)  கொன்றவர்  யாவர்  என்று  கேட்க; தார்
கொன்றையினான் கிரி சாய்த்தவன்தான்
- மார்பில் கொன்றை மாலை
அணிந்த    சிவபிரானுடைய   (கைலாய)   மலையைப்   பெயர்த்துச்
சாய்த்தவானகிய இராவணன்; அதிகாயன் என்னும் பேர் கொன்றவன்
-  அதிகாயன்  என்னும்  பெயருடைவனைக்  கொன்றவன்;  வென்றி
இலக்குவன்
 -  வெற்றி  பொருந்திய  இலக்குவன்;  பின்பு நின்றார் -
பின்பு    நின்றவர்களாகிய    கும்பநிகும்பர்    முதலியோர்;    ஊர்
கொன்றவனால்  பிறரால்
 -  (இலங்கை)  ஊரைத்  தீயிட்டு  அழித்த
அனுமனாலும்  பிறராலும்  (கொல்லப் பட்டனர்); என - என்று,; உற்ற
எல்லாம்
- நடந்ததை எல்லாம்; உரைத்தான் - கூறினான்.
 

                                                   (6)
 

8008.

‘கொன்றார் அவரோ? “கொலை சூழ்க!” என நீ கொடுத்தாய்;
வன் தானையர் மானிடர் வன்மை அறிந்தும் மன்னா!
என்றானும் எனைச் செல ஏவலை; இற்றது’ என்னா,
நின்றான், நெடிது உன்னி, முனிந்து, நெருப்பு உயிர்ப்பான்.

 

மன்னா   - (இந்திரசித்தன் இராவணனைப் பார்த்து) அரசனே; வன்
தானையர்
 - வலிமை உள்ள குரங்குப் படையை உடைய; மானிடர் -
மனிதர்களாகிய  (இராமலக்குவருடைய);  வன்மை  அறிந்தும் - போர்
வலிமையை  (நீ  முதல் நாள் போரில்) அறிந்திருந்தும்; என்றானும் -
(அவர்களோடு  போரிட) என்ன காரணத்தாலோ; எனைச் செலஏவலை
-  என்னை போரிடச் செல் என்று ஏவவில்லை; கொன்றார் அவரோ -
(என்னை   ஏவாது   அவர்களை   அனுப்பியதால்)   கொன்றவர்கள்
அவர்களல்லர்;   கொலை   சூழ்க  என  -  (இவர்களைக்)  கொலை
செய்யுங்கள் என்று; நீ கொடுத்தாய் - நீயே (அவர்களிடம் அனுப்பிக்)
கொடுத்தாய்;  இற்றது என்னா - (அவர்கள் போரில் இறந்து பட்டதால்
நம்முடைய  வலிமை)  குறைந்து  விட்டது  என்று;  நெடிது உன்னி -
நீண்ட  நேரம்  (அது  பற்றி)  நினைத்து; முனிந்து - சினம் கொண்டு;
நெருப்பு   உயிர்ப்பான்  -  நெருப்புப்  போல்  பெருமூச்சு  விட்டுக்
கொண்டு; நின்றான் - நின்றான்.