அவர்கள் இறந்ததற்குக் காரணம் உன் பிழை தான் எனக் கூறினான் இந்திரசித்தன் என்க. மன்னா - தந்தை என விளிக்காது மன்னா என விளித்ததாக அமைத்த நயம் காண்க. | (7) | 8009. | ‘அக்கப் பெயரோனை நிலத்தொடு அரைத்துளானை, விக்கல் பொரு, வெவ் உரைத் தூதுவன் என்று விட்டாய்; புக்கத் தலைப்பெய்தல் நினைந்திலை; புந்தி இல்லாய்! மக்கள்-துணை அற்றனை; இற்றது உன் வாழ்க்கை மன்னோ! | அக்கப் பெயரோனை - அக்க குமாரன் என்ற பெயர் கொண்டவனை; நிலத்தொடு அரைத்துளானை - நிலத்தில் தேய்த்து அழித்தவனாகிய அனுமனை, (நான் பிரமக் கணையால் கட்டிக் கொண்டு வந்த போது கூட); விக்கல்பொரு - எச்சிலுக்குச் சமமான; வெவ் உரைத்தூதுவன் என்று - எதிரியின் விருப்பமான சொற்களைச் சொல்லுகிற தூதுவன் என்று சொல்லி; விட்டாய் - (கொல்லாது) விட்டு விட்டாய்; புக்கத் தலைப் பெய்தல் நினைந்திலை - (அவனை விட்டதால் நம் பக்கச் செய்திகள்) எதிர்ப் பக்கத்தில் புகுந்து நிறைதலை நினைத்தாய் இல்லை; புந்தி இல்லாய் - அறிவு அழிந்து போனவனே; மக்கள் துணை அற்றனை - (இப்போது நீ) மக்களின் துணையை இழந்து விட்டாய்; உன் வாழ்க்கை இற்றது மன்னோ - உன் வாழ்க்கை அழிந்து விட்டது. | (8) | இந்திர சித்தன் வஞ்சினம் | 8010. | ‘என், இன்று நினைந்தும், இயம்பியும் எண்ணியும்தான்? கொன் நின்ற படைக்கலத்து எம்பியைக் கொன்றுளானை, அந் நின்ற நிலத்து அவன் ஆக்கையை நீக்கி அல்லால், மன் நின்ற நகர்க்கு இனி வாரலென்; வாழ்வும் வேண்டேன். |
|
|
|