பக்கம் எண் :

 நாகபாசப் படலம் 225

     

ஏற்றான் இகல் இந்திரன் ஈர்-இரு கால், எனக்கே
தோற்றான் தனக்கு என் நெடுஞ் சேவகம் தோற்க’

                                   என்றான்.
 

மாற்றா  உயிர்  எம்பியை - (பிறரால்) போக்க  முடியாத  உயிரை
உடைய  என்  தம்பியாகிய  (அதிகாயனை); மாற்றிய மானுடன் தன் -
உயிர்  வாங்கிய மனிதனாகிய (இலக்குவன்) தன்;  ஊற்று ஆர் குருதிப்
புனல்
  -   ஊற்றுப்   போல்   நிறைந்து   பெருகி  வரும்   இரத்த
வெள்ளத்தைப்;   பார்மகள்   உண்டிலாளேல்  -  நிலமாகிய  பெண்
உண்ணாமல் போனால்; இகல் இந்திரன் - போராற்றல் மிக்க இந்திரன்;
எனக்கே ஏற்றான் - என்னுடன்  போர் ஏற்று; தோற்றான் தனக்கு -
தோற்றவனாகிய  (அவன்)  தனக்கு;  என்  நெடுஞ்  சேவகம்  - என்
பெருவலிமை;  ஈர்  இருகால்  -  நான்குமுறை;  தோற்க  - தோற்றது
ஆகட்டும்; என்றான் - (என்று இந்திரசித்தன்) கூறினான்.
 

                                                  (11)
 

8013.

‘பாம்பின் தரு வெம் படை, பாசுபதத்தினோடும்,
தேம்பல் பிறை சென்னி வைத்தான் தரு தெய்வ ஏதி,
ஓம்பித் திரிந்தேன் எனக்கு இன்று உதவாது போமேல்,
சோம்பித் துறப்பென்; இனிச் சோறும் உவந்து வாழேன்.

 

பாம்பின்     தருவெம்படை - பாம்பு வடிவில் அமைந்த கொடிய
படையினையும்;  பாசு  பதத்தினோடும்  -  பாசு பதப்படையினையும்;
தேம்பல்  பிறை சென்னி வைத்தான் - குறைந்த கலையுடைய பிறைச்
சந்திரனைத் தலையில் அணிந்தவனாகிய சிவபிரான்; தரு தெய்வஏதி -
தந்த   தெய்வத்தன்மை  பொருந்திய   வாட்படையினையும்;   ஓம்பித்
திரிந்தேன் எனக்கு
- பாதுகாத்துத் திரிந்தவன் ஆகிய எனக்கு; இன்று
உதவாது  போமேல்
 -  (அவை)  இன்று  உதவாமல்  போகுமானால்;
சோம்பித்  துறப்பென்  - (என் உயிரைச்) சோம்பல் அடைந்து விட்டு
விடுவேன்; இனிச் சோறும் உவந்து வாழேன் - இனிமேல் சோற்றையும்
விரும்பி வாழமாட்டேன்;
 

பாம்பின்     தரு வெம்படை - நாக அத்திரம், பாசுபதம் - பசுபதி
தொடர்புடையது. பாசுபத அத்திரம் என்க. தேம்பல் பிறை - குறைந்த
கலையினை உடைய பிறை, ஏதி - வாள்.
 

                                                  (12)