பக்கம் எண் :

226யுத்த காண்டம் 

8014.

‘மருந்தே நிகர் எம்பிதன் ஆர் உயிர் வவ்வினானை
விருந்தே என அந்தகற்கு ஈகிலென், வில்லும் ஏந்தி,
பொரும் தேவர் குழாம் நகைசெய்திடப் போந்து, பாரின்
இருந்தேன்எனின், நான் அவ் இராவணி அல்லென்’
                                      என்றான்.

 

மருந்தே     நிகர் எம்பிதன் - சாவா மருந்தைப் போன்ற என்
தம்பியாகிய  அதிகாயன்  தன்;  ஆர்  உயிர் வவ்வினானை - அரிய
உயிரைக்  கவர்ந்தவன்  ஆகிய  (இலக்குவனை); அந்தகற்கு விருந்தே
என  ஈகிலென்
 -  யமனுக்கு விருந்து என்று கொடுக்காமல்; பொரும்
தேவர்  குழாம்   நகை   செய்திட
  -   (என்னுடன்)   போரிடும்
(பகைவர்களான)   தேவர்களின்  கூட்டம்  (எள்ளி)   நகை   செய்திட;
வில்லும்  ஏந்தி  - வில்லையும் (கையில்) ஏந்தி; நான் - நான்; பாரின்
போந்து   இருந்தேன் எனின்
 -  நிலத்தில்  பொருந்தி  இருந்தேன்
என்றால்; அவ் ‘இராவணி அல்லென் - அந்த இராவணனுடைய மகன்
அல்லேன்; என்றான் - என்று (இந்திரசித்தன்) கூறினான்.
 

இராவணி - இராவணனுடைய மகன் இந்திரசித்து.
 

                                                  (13)
 

8015.

‘ஏகா, இது செய்து, எனது இன்னலை நீக்கிடு; எந்தைக்கு
ஆகாதனவும் உளவோ? எனக்கு ஆற்றலார்மேல்
மா கால் வரி வெஞ் சிலையோடும் வளைத்த போது
சேகு ஆகும் என்று எண்ணி, இவ்இன்னலின் சிந்தை
                                     செய்தேன்.’

 

ஏகா- (இராவணன் இந்திரசித்தனைப் பார்த்து நீ) ஏகி; இது செய்து
- (இலக்குவனைக் கொல்வதாகிய) இதனைச் செய்து; எனது இன்னலை
நீக்கிடு
  -   எனது   துன்பத்தைப்   போக்கி   விடுக;  எந்தைக்கு
ஆகாதனவும்  உளவோ
- எந்தை போன்றவனாகிய (உன்னால்) செய்ய
முடியாத   செயல்களும்   உள்ளனவா   (இல்லை   என்றபடி);  இவ்
இன்னலின்
   -    (எனக்கு   ஏற்பட்ட)   மக்களை   இழத்தலாகிய
துன்பக்காலத்தில்;  எனக்கு  -  எனக்காக;  ஆற்றலார்  மேல்  - (நீ)
பகைவர்  மேல்  சென்று; மாகால் வரி வெஞ்சிலை யோடும் - பெரிய
தண்டினை    உடைய   கட்டமைந்த   கொடிய   வில்லோடு   கூட;
வளைத்தபோது - (அவர்களை) வளைத்த