காலத்தில்; சேகு ஆகும் என்று எண்ணி - (அச்செயல் எனக்கு) உறுதியை உண்டாக்கும் என்று எண்ணிப் பார்த்து; சிந்தை செய்தேன் - (உன்னை அனுப்ப) மனதில் எண்ணினேன். | இன்னல் - மக்களை இழந்தமையும், பகைவர் வென்றமையும், சீதையைப் பெறாமையுமாகிய இன்னல் என்க. | (14) | இந்திரசித்தன் போர்க்கோலம் பூண்டு, களம் புகுதல் | 8016. | என்றானை வணங்கி, இலங்கு அயில் வாளும் ஆர்த்திட்டு, ஒன்றானும் அறா, உருவா, உடற்காவலோடும், பொன் தாழ் கணையின் நெடும் புட்டில் புறத்து வீக்கி, வன் தாள் வயிரச் சிலை வாங்கினன்-வானை வென்றான். | என்றானை - என்று கூறிய இராவணனை; வானை வென்றான் - வானுலகத்தில் உள்ளவர்களை வென்றவனாகிய இந்திரசித்தன்; வணங்கி - வணங்கி; ஒன்றானும் அறா உருவா உடற்காவலோடும் - ஒன்றினாலும் அறுக்கவோ (அ) ஊடுருவிச் செல்லவோ முடியாத கவசத்தோடு; இலங்கு அயில்வாளும் ஆர்த்திட்டு - ஒளி விளங்குகிற கூர்மையான வாளையும் (இடையில்) அணிந்து கொண்டு; பொன் தாழ் கணையின் நெடும் புட்டில் - பொன் போல் ஒளிவீசுவதும், உள்ளே ஆழ்ந்த வடிவம் கொண்டதுமான, பெரிய அம்பு அறாத் துணிகளை; புறத்து வீ்க்கி - (தோள்களின்) புறத்தில் கட்டிக்கொண்டு; வன்தாள் வயிரச்சிலை வாங்கினன் - வலிய (இரு) முனைகளை உடைய உறுதியான வில்லை எடுத்துக் கொண்டான். | (15) | 8017. | வயிரந் நெடு மால் வரை கொண்டு, மலர்க்கண் வந்தான், செயிர் ஒன்றும் உறா வகை, இந்திரற்கு என்று செய்த உயர் வெஞ் சிலை; அச் சிலை பண்டு அவன் தன்னை ஓட்டி, துயரின் தலை வைத்து, இவன் கொண்டது; தோற்றம்ஈதால். |
|
|
|