பக்கம் எண் :

228யுத்த காண்டம் 

அச்சிலை     -  (இந்திரசித்தன்  கையில்  கொண்டிருந்த)  அந்த
வில்லானது;  மலர்க்கண்  வந்தான்  -  (மாலின்  நாபித்) தாமரையில்
தோன்றியவன்  ஆகிய பிரமன்; செயிர் ஒன்றும் உறாவகை - துன்பம்
ஒன்றும் ஒரு சிறிதும் உண்டாகாமல்; இந்திரற்கு என்று - ;இந்திரனுக்கு
என்று;  வயிரந்  நெடுமால்  வரை  கொண்டு செய்த - வலிமையான
பெரிய வச்சிரமலையைக் கொண்டு செய்த; உயர் வெஞ்சிலை - சிறந்த
கொடிய  வில்லாகும்; பண்டு - முன்பு; அவன் தன்னை துயரின் தலை
வைத்து  ஓட்டி
 -  அந்த  இந்திரனைத்  துன்பத்துக்கு உள்ளாக்கித்
தோற்று  ஓடச்  செய்து;  இவன்  கொண்டது  - இந்த இந்திரசித்தன்
(பறித்துக்)  கைக்கொண்டதாகும்;  தோற்றம்  ஈதால்  - (இவ்வில்லின்)
வரலாறு இதுவேயாகும்.
 

                                                  (16)
 

8018.

தோளில் கணைப் புட்டிலும், இந்திரன் தோற்ற நாளே
ஆளித் திறல் அன்னவன் கொண்டன; ஆழி ஏழும்
மாள, புனல் வற்றினும் வாளி அறாத; வண்கண்
கூளிக் கொடுங் கூற்றினுக்கு ஆவது ஓர் கூடு போல்வ..

 

தோளில் கணைப்புட்டிலும் - (இந்திரசித்தன்) தோளில் கட்டியுள்ள
அம்பு  அறாத்தூணிகளும்;  இந்திரன்  தோற்ற  நாளே  -  இந்திரன்
தோற்றுத்  தன்னிடம்  சிறைப்பட்ட நாளில்; ஆளித்திறல் அன்னவன்
கொண்டன
    -     யாளியினைப்     போன்ற    வலிமையுடைய
அத்தன்மையனான   (இந்திரசித்தன்);   கொண்டன   -  அவனிடம்
பறித்துக்  கொண்டவை ஆகும்; ஆழி ஏழும் மாள புனல் வற்றினும் -
கடல்கள்  ஏழும்  இல்லை  என்று கூறுமாறு (அவற்றின்) நீர் முழுதும்
வற்றிவிட்டாலும்; வாளி அறாத - (எடுக்க எடுக்க) அம்புகள் குறையாத;
வன்கண்   கூளி   -  கொடிய  கண்களை  யுடைய  பேய்களுக்கும்;
கொடுங்கூற்றினுக்கும் - கொடிய யமனுக்கும்; ஆவது ஓர்கூடு போல்வ
- பிணங்களையும் உயிரையும் உணவாக்கித் தருகின்ற ஒரு கூண்டைப்
போன்றுள்ளன,
 

கணைப்புட்டில்     - அம்பு அறாத்தூணி. ஆளி - யாளி, சிங்கம்
போன்ற  உடலமைப்பும்  துதிக்கையும்  உள்ள ஒரு மிருகம். திறல் -
வலிமை.  ஏழுகடல்கள்  -  உப்புநீர், கருப்பஞ்சாறு, கள், நெய், பால்,
தயிர், நன்னீர் ஆகியவை நிறைந்த கடல்கள்.
 

                                                  (17)
 

8019.

பல்லாயிர கோடி படைக்கலம், பண்டு, தேவர்
எல்லாரும் முனைத்தலை யாவரும் ஈந்த, மேரு